பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 பூர்ணசந்திரோதயம் - 5

ஆனால், முடிவில் பாராக்காரனால் இழுத்துக்கொண்டு

போகப்பட்ட கலியாணசுந்தரம் பூர்ணசந்திரோதயத்தைப்

பார்த்து கமலமென்று விளித்ததையும், அவளது தங்கையை ஷண்முகவடிவென்ற பெயரால் குறித்ததையும் கேட்கவே,

நீலமேகம்பிள்ளை திடுக்கிட்டு நிமிர்ந்து பூர்ணசந்திரோதயத்தின் முகத்தை உற்றுப் பார்த்தார். பார்க்கவே, சில மாதங்களுக்கு

முன்னர் சோமசுந்தரம் பிள்ளையைத்தேடிக் கொண்டு தமது மாளிகைக்கு வந்த பெண்ணைப் போலவே அவள் காணப்பட்டாள். அவள் அப்போது ராஜஸ்திரீ போல நேத்திராநந்தமாக அலங்கரித்துக் கொண்டு அடியோடு புது மனுஷியாக மாறிப் போயிருந்தாலும்தாம் அவளை ஏற்கெனவே பார்த்திருந்ததன் அடையாளம் நன்றாகத் தெரிந்தது. அந்த விஷயத்தில் அம் மணிபாயி சம்பந்தப்பட்டிருந்ததாலும், அவளது பெயரும், ஷண்முக வடிவின் பெயரும் ஒத்துப்

போயின. ஆதலால் அவளே தமதுமூத்த தங்கையான கமலம் என்பது அவருக்குச் சந் தேகமறத் தெரிந்தது.

ஆகவே, அவர் தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு விழித்து எழுகிறவர் போலத் தமது ஆசனத்திலிருந்து எழுந்தார். அந்தச் சமயத்தில் இளவரசர் பூர்ணசந்திரோதயத்தின் கழுத்தில் திருமாங்கலியத்தைக் கட்டக் குனிந்தார். ஆகையால், அதைக் காணவே, நீலமேகம் பிள்ளையின் மனம் பதறித் துடித்தது. தேகம் கட்டிலடங்காமல் பறந்தது. தாம் எவ்வளவு அதிக வேகமாய் ஓடினாலும், இளவரசர் திருமாங்கலிய தாரணம் செய்வதற்குள் அவரிடம் போய்ச் சேர முடியாதென்ற எண்ணம் தோன்றியது. ஆனால், தமது தந்தையின் உயிலிலிருந்த ரகசியத்தை அவ்வளவு பெரிய ஸதசில் பகிரங்கப்படுத்தவும் அவரது மனம் இடந்தரவில்லை. ஆகவே, அவர் தம்மை மறந்து இளவரசரிருந்த இடத்தை நோக்கி நடந்தபடி, ‘மகாராஜாவே! நிறுத்துங்கள்; நிறுத்துங்கள்; பொட்டைக் கட்ட வேண்டாம்’ என்று ஒங் கிக் கூச்சலிட்டார். அப்போது சங்கீத கோஷம்