பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 277 பிரமாதமாக இருந்தது. ஆகையால், அவர் தமது முழு வல்லமையையும் உபயோகித்துப் பெரும் கூச்சல் செய்யத் தொடங்கினார். ஆதலால், அவரது குரலோசைஅந்தக்கலியான மண்டபம் முழுதும் நன்றாகக் கேட்டது. இளவரசர் முதலிய எல்லோரும் மறுபடியும் திடுக்கிட்டு ஆச்சரியமடைந்து, அந்தக் குரல் உண்டான திக்கில் சடக்கென்று திரும்பிப் பார்த்தனர். கலியாணசுந்தரமே பாராக்காரர்களின் பிடியிலிருந்து தப்பித்து ஓடிவந்து மறுபடியும் அவ்வாறு கூக்குரலிடுகிறான் என்றே எல்லோரும் முதலில் நினைத்தனர். ஆதலால் அவன்மீது எல்லோரும் பெருத்த சீற்றமும், பதைப்பும் கொண்டவராய்த் தாறுமாறாகப் பேசத் தொடங்கினர். “இந்தப் பைத்தியக்காரனை அடியுங்கள், உதையுங்கள், வெட்டுங்கள், குத்துங்கள், துகையுங்கள், கொல்லுங்கள்’ என்று எண்ணிறந்த குரல்கள் உண்டாயின. ஆனால், பாராக்காரர்கள் கலியாணசுந்தரத்தைக் கெட்டியாகப் பிடித்துத்துரத்தில் கொண்டுபோய் விட்டதையும் ஜெமீந்தார்களின் ஆசனங்களிலிருந்து புதிதாக இன்னொருவர் அவ்வாறு கூச்சலிட்டுக்கொண்டு இளவரசரிடம் சென்றதையும் கண்ட ஜனங்கள் திடுக்கிட்டு சந்தடி செய்யாமல் அடங்கிப் போயினர். மேளவாத்தியங்களின் முழக்கம் முதலிய எல்லா ஒசையும் ஒய்ந்துவிட்டது. ஆகையால், அந்த மண்டபம் முழுதும் நிசப்தமே குடிகொண்டது. பூர்ணசந்திரோதயம் அம்மணிபாயி முதலியோரும் திடுக்கிட்டு மறுபடிகலியாணம் நடைபெறாமல் தடுத்துக்கொண்டு வந்த மனிதர் இன்னார் என்பதையும் என்ன காரணத்தினால் அவரும் அப்படித் தடுக்கிறார் என்பதையும் நன்றாகத் தெரிந்துகொள்ள மாட்டாமல், பெருங் குழப்பமும் கலக்கமும் அடைந்து பிரமித்து ஸ்தம்பித்து நீலமேகம் பிள்ளையை உற்று நோக்கினர். இளவரசரது நிலைமையோ முற்றிலும் கட்டிலடங்காததாக இருந்தது. தாம் அரும்பாடுபட்டு பூர்ணசந்திரோதயத்தின் பிரியத்தையும் சம்மதியையும் பெற்று, வகை வகையான கலியான ஏற்பாடுகள் செய்து, அந்த சுபகாரியத்தை நடத்த யத்தனிக்கையில், முதலில் ஒரு மனிதன்