பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 பூர்ணசந்திரோதயம்-5 தோன்றித் தடுத்து அநாவசியமான காலஹரணம் செய்ததுபோல மறுபடியும் இன்னொருவன்தோன்றுகிறானே என்ற அபாரமான ஆத்திரமும், கொதிப்பும் பிறந்தன. முதலில் வந்தவனிடம் தாம் லலிதமாகப்பேசியதனால், இன்னொருவன் துணிவுகொண்டு, அதே விஷயத்தில் பரிந்து பேசப் போகிறான் என்றும், ஆகையால், இரண்டாவது மனிதன் எவனாக இருந்தாலும் அவனுக்கு முகங் கொடுத்துப் பேசாமல் அவனை உடனே அப்புறப்படுத்த வேண்டுமென்றும் தீர்மானித்துக்கொண்ட இளவரசர், “அடே பாராக்காரர்களா இதோ ஓடிவரும் இந்தப் பைத்தியக்காரனையும் பிடித்து உடனே அப்புறப்படுத்துங்கள்’ என்றார்.

அவர்பேசி வாய்மூடுமுன் வேறு நாலைந்து பாராக்காரர்கள் கு.பிரென்று பாய்ந்து நீலமேகம்பிள்ளையைப் பிடித்து அப்பால் இழுக்கத் தொடங்கினர். இளவரசர் மறுபடியும் பூர்ணசந்தி ரோதயத்தண்டை நெருங்கி மாங்கல்யத்தைக் கழுத்தில் இணைக்க முயன்றார்.

நீலமேகம் பிள்ளை முன்னிலும் அதிக பலமான குரலில் ஓங்கிக் கூச்சலிட்டு, ‘மகாராஜாவே கொஞ்சம் பொறுங்கள். நான் தங்களுடைய காதில் ரகசியமாக ஒரே ஒரு வார்த்தை சொல்லுகிறேன். அதைக் கேட்டுக்கொண்டு, அதற்குமேல் யுக்தமானால் நீங்கள் தாலி கட்டலாம்’ என்றார்.

அதைக்கேட்ட இளவரசர் மறுபடியும் திரும்பி நின்று அந்த மனிதர் யாரென்று உற்றுப் பார்த்தார். பார்க்கவே அவர் நீலமேகம் பிள்ளையென்று உணர்ந்தார். அவரது தாயை வஞ்சித்த நினைவும், அதே காரணத்தினால் அவள் இறந்து போன நினைவும், எப்போதும் மாறாமல் இளவரசரது மனதில் இருந்து வந்தன ஆதலால், அவர் எப்போதும் நீலமேகம் பிள்ளையிடம் மட்டற்ற வாஞ்சையோடு நடந்து வந்தவர். ஆதலால், அப்போது வந்தவர் நீலமேகம்பிள்ளை என்பதை உணரவே அவரிடம் தாம் அதிகமான கண்டிப்பும்