பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 279 நிர்த்தாrணியமும் காட்டக் கூடாதென்று நினைத்தவராய், “என்ன நீலமேகம் பிள்ளை நீர் கூடவா அறியாத குழந்தை மாதிரி இப்படி நடந்து கொள்ளுகிறது. இப்போது வந்துவிட்டுப் போன மனிதன் பைத்தியக்காரன் போல இருக்கிறது. அவன் சொன்னதைக் கேட்டு நீரும் இப்படி நடந்து கொள்ளலாமா? என் காதில் நீர் என்ன ரகசியம் சொல்லப் போகிறீர்? அதை அங்கிருந்தபடியே சொல்லுகிறதுதானே இதில் ரகசியம் என்ன இருக்கிறது? பூனாதேசத்து சங்கதிதான் ஊர்முழுதும் அடிபட்டுக் கிடக்கிறதே!’ என்றார்.

அதைக்கேட்ட நீலமேகம்பிள்ளை ஒருவாறு கிலேச மடைந்தவராய், ‘'மகாராஜாவே இப்போது இங்கே வந்து விட்டுப் போனவருக்காகப் பரிந்துகொண்டு நான் பேசவர வில்லை. பூனா தேசத்திலுள்ள பட்டமகிஷியாருடைய விஷயமும் எனக்கு அவ்வளவாகத் தெரியாது. இப்போது வந்து பேசிய மனிதர் குறித்த விஷயங்களுக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத இன்னொரு முக்கியமான காரணத்தினால் நான் இந்தக் கலியாணத்தைத் தடுக்கிறேன். நான் சொல்லப் போகும் ரகசியத்தை இத்தனை ஜனங்களுக்கும் எதிரில் சொல்வது தங்களுக்குத்தான் பெருத்த இழிவாக இருக்கும். அதற்காகவே நான் யோகிக்கிறேன். தாங்கள் வருத்தப்படுவதில்லை என்று சொன்னால், நான் விஷயத்தை வெளியிடத் தடையில்லை” என்றார்.

தமக்கு இழிவு ஏற்படுமென்று நீலமேகம்பிள்ளை சொன்னது இளவரசரது மனதில் சுருக்கென்று தைத்தது. அத்தனை ஜனங்களுக்கும் எதிரில் நீலமேகம் பிள்ளை தம்மிடம் மரியாதைக் குறைவாக நடந்துகொள்ளுகிறார் என்று நினைத்த இளவரசர் நிரம்பவும் ஆத்திரமடைந்து இறுமாப்பாகப் பேசத் தொடங்கி, ‘ஒகோ அப்படியா! இவர்களுக்கு முன்னால் விஷயத்தைச் சொன்னால் எனக்கு இழிவை உண்டாக்கக்கூடிய அப்படிப்பட்ட அபூர்வமான செய்தி என்ன ஐயா! நீர் நம்மோடு