பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 281 சுபகாரியம் நடக்கும்போது ஆணையிட்டுத் தடுப்பானா? ஒய் நீலமேகம்பிள்ளை எனக்கு உம்மோடு அதிகமாகப் பேசிக் காலஹரணம் செய்ய நேரமில்லை. விஷயத்தைச் சொல்லப் போகிறீரா? இல்லாவிட்டால், என்னுடைய கோபத்துக்குப் பாத்திரராகப் போகிறீரா? ஒரே வார்த்தையில் பதில் சொல்லும்’ என்றார். உடனே நீலமேகம் பிள்ளை நயமாகப் பேசத் தொடங்கி, “மகாராஜாவே அந்த ரகசியத்தை வெளியிடுவது ஒரு பிரயாசையான காரியமல்ல. ஒரு நொடியில் விஷயத்தை வெளியிட்டு விடுவேன். அப்படிச் செய்தால், அதனால் தங்களுக்கு அவமானம் ஏற்படுமென்று நினைத்தே, நிரம்பவும் ஆழ்ந்து யோசனை செய்து நான் மூடி மூடிப் பேசுகிறேன். நான் தங்களுக்குச் சமீபத்தில் வந்து ரகசியமாக ஒரு வார்த்தை தங்களுடைய காதில் சொல்லும்படி தாங்கள் ஆக்ஞாபித்தால் அதுவே போதுமானது. அப்படிச் செய்ய மனமில்லாவிட்டால் இதோ என்னிடமிருக்கும் ஒரு முக்கியமான தஸ்தாவேஜியை அனுப்புகிறேன். அதையாவது படித்துப் பார்த்துவிட்டு அதன் பிறகு தங்கள் இஷ்டப்படி எதையும் செய்யலாம். தாங்கள் இப்போது ஆத்திரமிகுதியினால், அந்த ரகசியத்தை வெளியிடும் படி பிடிவாதமாகப் பேசுகிறீர்கள். அதை நான் வெளியிடும் பட்சத்தில் பிறகு தாங்கள் ‘ஏன் இப்படிச் செய்தோம்’ என்று விசனித்து வருந்த நேரும் என்று கூறிய வண்ணம் தமது சட்டைப் பைக்குள் எப்போதும் பத்திரமாக வைத்திருந்த தமது தந்தையின் மரணாந்த உயிலைக் கையில் எடுத்தார்.

அவரது சொல்லைக்கேட்ட இளவரசர் நிரம் பவும் காலஹரணமாவதைக் கண்டு தமது பொறுமையை முற்றிலும் இழந்து பதற்றமாகப் பேசத்தொடங்கி, “நீர்கையில் வைத்திருப் பதைப் பார்த்தால் அது ஒரு பெரிய புராணமாகத் தோன்றுகிறது. அதையெல்லாம் படித்துக்கொண்டிருக்க யாருக்கு நேரமி ருக்கிறது? அதை நான் இப்போது படித்துப் பார்க்க முடியாது. நீர் என்கிட்டே வந்து தான் அந்த விஷயத்தை வெளியிட