பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 25 கிராமங்களுக்கு நான் அடிக்கடி போகவும் நேர்ந்தது. அந்தக் காலத்திலும் இளவரசர் நம்முடைய ஜாகைக்கு வருவதும் நான் ஊரிலில்லை என்பதை அறிந்துகொண்டு போவதுமாக இருந்தார். அப்படியிருக்க, என் சம்சாரம் மறுபடிகர்ப்பவதியாகி ஒரு பெண் குழந்தையைப் பெற்றாள். அந்தப் பெண் தெய்வ சம்பந்தமாகப் பிறந்த குழந்தைபோல வர்ணிக்க இயலாத மகா சிரேஷ்டமானஅழகு வாய்ந்ததாயிருக்கக் காணவே, என்உடம்பு பூரித்துப் பரவசமடைந்தது. என்னுடைய சந்தோஷம் முன்னிலும் பதினாயிரம் மடங்கு பெருகியது. நான் என் பெண் ஜாதியிடத்தில் வைத்திருந்த மதிப்பும், பிரேமையும், பாசமும் அபாரமாகப் பெருகின. அவளை நான் என்னுடைய நிலையாகவே மதிக்கத் தொடங்கினேன். அதன்பிறகு சுமார் ஒரு வருஷகாலமாயிற்று. நான் நாலைந்து நாட்களுக்கு ஊரைவிட்டு வெளியூருக்குப் போக வேண்டிய ஒரு சந்தர்ப்பம் வந்து வாய்த்தது. நான் என் சம்சாரத்தையும் குழந்தைகளையும் விட்டுப் பிரிய மனமற்றவனாய் அவர்களையெல்லாம் ஒவ்வொருவராக கட்டியனைத்து முத்தமிட்ட பின்னர் அவர்களை விட்டுப் பிரிந்து வெளியூருக்குப் போனேன். அப்படி நான் போன இடத்தில், நான் எந்த அலுவலைக் குறித்துப் போனேனோ அந்த அலுவல் இரண்டே நாட்களில் முடிந்துபோய் விட்டது. நான் எதிர்பார்க்காதபடி அந்த அலுவல் சீக்கிரத்தில் முடிந்து போனதைக் கண்டு நான் சந்தோஷமடைந்து, என் மனைவி மக்களையும் இளவரசரை யும் அடைய எண்ணி உடனே புறப்பட்டு தஞ்சைக்கு வந்தேன். அப்படி நான் வந்தது நடு இரவு சமயம். நான் வந்ததைக் கண்ட வாசல் காவல்காரன் திடுக்கிட்டு ஒருவித அச்சங் கொண்டு அதை என்னிடம் காட்டிக் கொள்ளாமல் மறைக்க எத்தனித்தான்.

அதைக் கண்ட நான், ‘ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாய்? ஏதாவது விசேஷமுண்டா? குழந்தைகளெல்லாம் செளக்கியந் தானே? ‘ என்று கேட்டேன். அவன் சிறிது தயங்கியபின்,