பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 பூர்ணசந்திரோதயம் - 5 உம்மை நான் இலேசில் விடமாட்டேன். லக்ஷக்கணக்கில் கூடியிருக்கும் இந்த மகாஜனங்களுக்குமுன் நீர் பொய் சொல்லி முக்கியமான சடங்கைத் தடுத்து எங்களை அவமானப்படுத்திய பெருங் குற்றத்திற்கு உரிய தண்டனையை நீர் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கவேண்டும். அதற்கு நீர் சம்மதிப்பதானால், நீர் கேட்டுக் கொள்ளுகிறபடி நான் பூர்ணசந்திரோதயத்தை அழைத்துக்கொண்டு உம்மோடு தனியான ஒரிடத்திற்கு வருகிறேன். இது உமக்குச்சம்மதமா?’ என்றார்.

நீலமேகம் பிள்ளை, ‘ஆகா! அப்படியே செய்யலாம்.

சம்மதமே’ என்றார்.

உடனே இளவரசர் மகாஜனங்களைப் பார்த்துத் தாம் கால்நாழிகையில் திரும்பி வந்து விடுவதாகவும், அதுவரையில் எல்லோரும் அமைதியாக இருக்கும் படியாகவும் கூறியபின் பூர்ணசந்திரோதயத்தையும் நீலமேகம் பிள்ளையையும் அழைத்துக் கொண்டு பக்கத்திலிருந்த ஒர் அந்தரங்க விடுதிக்குள் நுழைந்தார். அப்போது பூர்ணசந்திரோதயம் முற்றிலும் குழப்பமும் கலக்கமும் அடைந்து, அது கனவோ நனவோ என்று சந்தேகித்தவளாய் இன்ன இடத்திற்குப் போகிறோம் என்பதை அறியாதவளாய் நடந்தாள். தாங்கள் ஏழ்மை நிலையிலுள்ள ஒருவருடைய பெண்கள் என்பதைத் தவிர, தங்கள் பிறப்பு, வளர்ப்பைப் பற்றிய வரலாறு எதையும் அவள் அறியாதவள். ஆதலால், தான் இளவரசருக்கு எந்த வகையில் மகளாக இருக்கக் கூடும் என்ற எண்ணம் பலமாக எழுந்து அவளை வருத்தத் தொடங்கியது. ஆனாலும், தான் பெருத்த வஞ்சகச் சூழ்ச்சியில் சம்பந்தப்பட்டதைப் பற்றியும் தனது தகப்பனையே. மணப்பதற்கு பகீரதப் பிரயத்தனங்கள் செய்ததையும் நினைக்க நினைக்க சகிக்க வொண்ணாத லஜ்ஜையினால், அவளது எண் சாண் உடம்பும் ஒரு சாணாய்க் குன்றியது. ஆனாலும், தான் அவரது சொந்தப் புதல்வி என்பது நிச்சயமானால், தன்னை அவர் தண்டிக்கவும் மாட்டார்; ஜனங்களுக்கு முன் அவமானப்படுத்த