பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 289 அவர் அந்த உயிலிலிருந்து திருப்புவது நிரம்பவும் கடினமாக இருந்தது. தஸ்தாவேஜியின் ஆரம்பத்தில் இராமலிங்கம் பிள்ளை தமது சொத்தின் விவரங்களையும் அவற்றைக் குறித்த விநியோக வகைகளையும் எழுதியிருந்ததை அவர் மேற் போக்காகப் படித்து அதன் முடிவில் தம்மைப்பற்றியும் அவரது மனைவியைப்பற்றியும் எழுதியிருந்த விஷயங்களை ஆழ்ந்து படிக்க ஆரம்பித்தார். படிக்கவே, அவரது கவனம் முழுதையும் அது கவர்ந்து கொண்டது. அபாரமான துக்கமும் வெட்கமும் மனவேதனையும் தோன்றி அவரை வதைக்கத் தொடங்கின. அவரது தேகம் குன்றிப்போயிற்று; இராமலிங்கம் பிள்ளையின் மனைவி முடிவில் இறந்துபோன வரலாற்றைப் படித்தபோது, அவரது கண்களிலிருந்து கண்ணிர் தாரை தாரையாக வழிந்தது. உதடுகள் துடித்தன. தேகம் பதறியது. மனம் பாகாய் உருகியது. அந்த விஷயத்தில் தாம் பெருத்த பாவச் செய்கை புரிந்து விட்டோமென்ற எண்ணமே அவருக்குப் பெருத்தநரகவேதனை யாகத் தோன்றி, அவர் ஒரு குழந்தைபோல மாறித் தேம்பித் தேம்பி அழும்படி செய்துவிட்டது. முடிவில் அவர் தமது பெண்களான கமலம் ஷண்முகவடிவு ஆகிய இருவரும் திருவாரூரில் வளர்க்கப்பட்டு வருவதாக எழுதப்பட்டிருந்த வரலாற்றைப் படிக்க, நெடுங்காலமாகத் தமது குழந்தைகளை விட்டுப் பிரிந்து திடீரென்று கண்ட தாய் தகப் பன்மாரது மனதில் எப்படிப்பட்ட அபாரமான வாஞ்சையும் பெரும் பாசமும் சுரந்து, அவர்கள் உருகிப் பரவசமடைந்து மெய் மறந்து ஆவல் கொள்ளச் செய்யுமோ அப்படிப்பட்ட நிலைமையை அவர் அடைந்தார். அந்த உயில் முடிவடைந்த காலத்தில் அவர் தம்மையும் உலகையும் முற்றிலும் மறந்து, அவமானம், துயரம், கழிவிரக்கம், பிதுர்வாஞ்சை முதலிய உணர்ச்சிகளாகிய, பெருத்த காட்டாற்று வெள்ளத்தில் ஆழ்ந்தவராய் அப்படியே ஒரு விநாடி நேரம் ஸ்தம்பித்துப் போயிருந்து சன்னதங்கொண்டவர் போல திடீரென்று எழுந்து ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து நீலமேகம் பிள்ளையின் காலடியில்