பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29O. பூர்ணசந்திரோதயம் - 5 போய் மண்டியிட்டு உட்கார்ந்துகொண்டு, ‘ஐயா நீலமேகம் பிள்ளை உம்முடைய தகப்பனார் என்னை உயிருக்குயிராக மதித்திருந்தார். அப்படியிருந்தும் நான் மதியிழந்து அவருக்குப் பெருத்த துரோகம் செய்து மகா கொடிய அபராதியாகி விட்டேன். உம்முடைய தாயாரைக் கொன்ற பாதகமும் என்னைத்தான் சேருமன்றி வேறு யாரையும் சேராது. அவர் இருந்த காலத்தில் அவருடைய முகத்தில் விழிக்க வெட்கப்பட்டு அவரைப் பார்க்காமலிருந்து விட்டேன். நீர் இந்தக் கடிதத்தைப் படித்தபிறகும், இதை மனதிற்குள் அடக்கிக்கொண்டு இந்தக் கலியாணத்திற்கு வந்திருக்கிறதைப் பார்த்தால், உம்முடைய பெரும்புத்தியும் பொறுமையும் வேறு யாரிடத்திலும் இருக்குமென்றே நான் நினைக்கவில்லை. உங்கள் விஷயத்தில் நான் செய்த மோசத்திற்குப் பதிலாக நீர் என்னை அணுவணுவாக வெட்டி சித்திரவதை செய்தாலும், அது நிரம்பவும் புண்ணியகரமானகாரியமாக இருக்கும். அதைவிட்டு பொறுமையே வடிவாக இந்த துரோகியின் இருப்பிடத்திற்கு வந்ததுமன்றி, நான்மறுபடியும் செய்ய யத்தனிக்கும் இன்னொரு பஞ்சமா பாதகத்தையும் தடுக்க யத்தனிக்கிறீர். நான் வயதில் உம்மைவிடப் பெரியவனாக இருந்தாலும், பெருந்தன்மை யிலும், பொறுமைக் குணத்திலும் நடத்தைத் தூய்மையிலும் உமக்கு நான் ஒர் எள்ளளவும் ஒப்பாகமாட்டேன். நான் என்னுடைய எந்த மேம்பாட்டையும் கவனிக்காமல் உமது காலைப் பிடித்துக்கொண்டு நான் செய்த பிழைகளை மன்னிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்வதே நான் செய்யத் தக்க காரியமென்று நினைக்கிறேன். உம்முடைய தகப்பனார் விஷயத்தில் நான் செய்ததுரோகத்தை rமிப்பதற்கு நீரேத்குந்த மனிதர். ஆகையால், இன்றோடு நீர் எல்லா விஷயத்தையும் உம்முடைய மனசைவிட்டு விலக்கிவிட வேண்டுமாய் நான் நிரம்பவும் வணக்கமாக இறைஞ்சி வேண்டுகிறேன். நீர் சற்று நேரத்துக்குமுன்சொன்னதிலிருந்து, இந்தப் பெண் திருவாரூரில்