பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 29 i விடப்பட்ட என்னுடைய இரண்டுபெண்களுள் ஒருத்தி என்பது எளிதில் விளங்குகிறது. ஆனால், இவள் மூத்தவளா இளையவளா என்பதும், நீர் இவளுடைய அடையாளத்தை எப்படி கண்டுகொண்டீர் என்பதும் எனக்குத் தெரியவில்லை. அந்த விவரத்தைத் தெரிவிக்க வேண்டுகிறேன்’ என்று நிரம்பவும் கனிவாக மனம் நைந்து கண்ணிர்விடுத்துக் குழந்தை போல் தேம்பித் தேம்பி அழுதார்.

கல்லும் கரைந்துருகத்தக்கதாக இருந்த அந்தப் பரிதாபகரமான காட்சியைக் கண்ட நீலமேகம் பிள்ளையும் சகிக்க வொண்ணாத பெருத்த சஞ்சலமடைந்தவராய், இளவரசரது விஷயத்தில் உண்மையான இரக்கமும் உருக்கமும் அடைந்து அவரைத் தூக்கி மறுபடியும் ஆசனத்தில் உட்காரச் செய்து, ‘மகாராஜா கேவலம் சிறிய பையனான என்னிடம் தாங்கள் இவ் விதம் பணிவாக நடந்துகொள்வதை நான் சகிக்க முடியவில்லை. பழைய விஷயங்களெல்லாம். ஏதோ அனுபிராப்த சாரத்தினால் நடந்ததென்ற எண்ணத்தினால் நான் எல்லாவற்றையும் மறந்துவிட்டேன். அது சம்பந்தமாக நான் தங்களிடம் பகைமையாவது அருவருப்பாவது பாராட்டுவேன் என்று நினைக்கவே வேண்டாம். எப்படி என்றால், இந்தக் கமலம் ஷண்முகவடிவு ஆகிய இருவரும் புதையல் எடுத்த பெருநிதிக் குவியல் போலவும், என் உயிருக்குயிராகவும் ஆகி விட்டனர். ஆதலால், அதுபோல தாங்களும் இவர்கள் இருவரையும் பெருஞ் செல்வத்துக்குச் சமமாக மதிப்பீர்களென்று நான் நிச்சயமாக நம்புகிறேன். ஆகையாலும், இருவருக்கும் பொதுவில் சொந்தமாகிவிட்ட இந்த இரண்டு பெண்மணிகளை உத்தேசித்து நாம் ஒருவருக் கொருவர் பாந்தவ் வியமும் அன்னியோன்னிய பாவமும் பாராட்டக் கடமைப்பட்டவராகி விட்டோம். ஆகையால், தாங்கள் இனி எதைக் குறித்தும் கவலையுற வேண்டிய அவசியமே இல்லை. நாம் இருவரும் பேசுவது கமலத்துக்குக்