பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 பூர்ணசந்திரோதயம்-5 கொஞ்சமும் விளங்காமல் இருப்பதால், அவள் விழித்துக் கொண்டு நிற்கிறாள். அவளிடம் அந்த தஸ்தாவேஜியைக் கொடுங்கள். அவள் அதைப் பார்த்துத் தங்களுடைய வரலாற்றைத் தெரிந்து கொள்ளட்டும்’ என்று கூறினார்.

அதுகாறும் காதலி நிலைமையில் எண்ணப்பட்டிருந்த தனது புதல்வியின் முகத்தைப் பார்ப்பதற்கு இளவரசரது மனம் கூசியது. அவள் அந்த தஸ்தாவேஜியிலுள்ள வரலாற்றைத் தெரிந்து கொண்டால் தங்களது தாயின் விஷயத்தில் தாம் பெருந் துயரம் செய்த செய்தியை அறிந்துதம்மை வெறுப்பாளோஎன்ற எண்ணம் இளவரசரது மனதில் உண்டானது. ஆனாலும், எப்படியும் அவள் அந்த தஸ்தாவேஜியைப் பார்க்காமல் தடுப்பது சாத்தியமில்லை என்று கண்ட இளவரசர் என்ன செய்வதென்பதை உணராமல் சிறிதுநேரம் மயங்கித் தயங்கி அப்படியே கண் மூடி ஒய்ந்து போனார். அவரது மன நிலைமையை ஒருவாறு யூகித்தறிந்துகொண்ட நீலமேகம் பிள்ளை இளவரசருக்கு எதிரிலிருந்த உயிலை எடுத்து, ‘அம்மா கமலம்! இதைப் படித்து உங்கள் பிறப் பின் வரலாற்றைத் தெரிந்துகொள்’ என்று நிரம் பவும் அன்பாகக் கூறி அதை அவளிடம் கொடுத்தார். -

அவர்கள் இருவருக்கும் நடந்த சம்பாஷணை முழுதும் பூர்ணசந்திரோதயத்திற்குச் சொப்பனத்தில் நடக்கும் நிகழ்ச்சி போலவே தோன்றியது. ஆகையால், அவள் பிரமித்து மதி மயக்கம் கொண்டு ஒன்றையும் அறியாமல் தத்தளித்து நின்று அவரால் கொடுக்கப்பட்ட உயிலை வாங்கி விரைவில் படித்து முடித்தாள். தானும் ஷண்முகவடிவும் பவானியம்பாள் புரம் ஜெமீந்தாரினது மனையாட்டிக்கும், இளவரசருக்கும் பிறந்த இருபிறப்புக் குழந்தைகள் என்ற செய்தி அவளால் சகிக்ககூடாத மகா துன்பகரமான செய்தியாக இருந்தது. அதுவுமன்றி, தான் தனது தகப்பனாராகிய இளவரசரையே மணந்து கொள்ளப் போகும் நிலைமையிலிருந்தது முன்னதைக் காட்டிலும்