பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 பூர்ணசந்திரோதயம் - 5 ‘ஒன்றும் விசேஷமில்லை. குழந்தைகளெல்லாம் சுகமாக இருக்கிறார்கள். சாயுங்காலம் இளவரசர் உங்களைத் தேடிக்கொண்டு வந்தார். நீங்கள் ஊருக்குப் போயிருப்பதாகச் சொன்னோம். அவர் இன்றைய தினம் இங்கேயே படுத்துக் கொள்வதாக அரண்மனையில் சொல்லிவிட்டு வந்தாராம். ஆகையால், மறுபடி திரும்பிப்போவது நன்றாக இருக்காதென்று சொல்லிவிட்டு இங்கேயே படுத்துக்கொண்டிருக்கிறார். என்றான். அந்த வார்த்தைகள் என் மனசில் விபரீதமான சந்தேகங்களைக் கிளப்பிவிட்டன. நான் இல்லாத சமயத்தில் அவர் வந்து நம்முடைய ஜாகையில் படுத்துக்கொண்டது முற்றிலும் புதுமையாகவும், அதற்குமுன் நடந்திராத காரியமாகவும் இருந்தது. ஆகையால், அந்த நிகழ்ச்சியில் ஏதோ சம்சயமிருக்கிறது என்று நினைத்து, அவனிடம் வேறு கேள்விகளைக் கேட்காமல் நான் உள்ளே நுழைந்து நேராக மேன்மாடத்துக்குள் போய் நானிருக்கும் காலத்தில் இளவரசர் வந்து எந்த இடத்தில் சயனித்துக் கொண்டாரோ அவ் விடத்திற்குச் சென்று பார்த்தேன். அங்கு கட்டில், மெத்தை, தலையணைகள் முதலியவை பரப்பப் பெற்றிருந்தன. ஆனாலும், அவற்றின்மேல் இளவரசர் காணப்படவில்லை. இளவரசர் விஷயத்திலும், என் மனைவியின் விஷயத்திலும் நான் அதுவரையில் அற்பமான சந்தேகமாவது கெட்ட அபிப்பிராயமாவது கொள்ளாமல் இருந்தவன் ஆகையால்,

இளவரசர் ஒருகால் தேகபாதை நிவர்த்தியின் பொருட்டு எழுந்து வெளியில் போயிருப்பாரோ என்று நினைத்தவனாய் நான் அவ்விடத்தைவிட்டு என்னுடைய சம்சாரத்தின் படுக்கை அறைக்குப் போய்ச் சேர்ந்தேன். அதன் வெளிக்கதவு மு. டி. வைக்கப்பட்டிருந்தது. அந்தப் படுக்கை அறைக்குள்

எங்களுடைய அனுமதியில்லாமல் யாரும் எந்தக் காலத்திலும்

துழைகிறதில்லை. ஆதலால், அது எந்தக் காலத்திலும்

தாளிடப்படாமல் சாதாரணமாகச் சாத்திவைக்கப்பட்டிருப்பது

முறைமையாதலால், அவ்வாறு அது அன்றைய தினமும்