பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 297 அவர்களுக்கும் எனக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை யென்று தாங்கள் நினைக்கும் படி அவர்கள் நிரம் பவும் ஜாக்கிரதையாக நடந்துகொண்டார்கள்; தாங்கள் சாதாரணமான மனுஷியை மணக்கமாட்டீர்களென்று நினைத்து மற்ற எப்பேர்ப்பட்டவருக்கும் நான் வசியமாகவில்லை என்பதைத் தாங்கள் நன்றாகத் தெரிந்து கொள்ளும் படி சாமளராவ் தந்திரம்செய்து தாங்களும் வேறு ஐந்து பெரிய மனிதர்களும் என்னைக் குறித்துப் பந்தயம் வைக்கும்படி சூழ்ச்சி செய்தனர். உங்களிடத்திலும், மற்றவர்களிடத்திலும் நான் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்ற விஷயங்களை எல்லாம் அவர்களே எனக்குக் கற்பித்துக் கொடுத்தார்கள். நான் என்னுடைய குடும்பத்தின் இல்லாக் கொடுமையையும், என் அத்தையின் கொடிய நிலைமையையும் கண்டு இனி என்ன செய்யப் போகிறோமென்று திகிலடைந்து கவலை கொண்டு அவர்களுடைய சொற்படி நடந்து ஏமாறிப்போனேன். ஆனால், அவர்கள் என்னை வேறுவிதமானதுன்மார்க்கத்தில் உபயோகப் படுத்தவும் முயன்றார்கள். அதற்கு மாத்திரம் நான் இடம் கொடுக்காமல் கண்டிப்பாக மறுத்துவிட்டேன். தங்களைக் கலியானம் செய்து கொள்ள வேண்டுமென்று நான் மனசால் நினைத்த ஒரு பாவத்தைத் தவிர, நான் திரிகரணசுத்தியாக யாதொரு பாவத்தையும் செய்தறியேன். எந்த விஷயத்திலும் ஒழுங்கு தவறுதலாக நடந்து கொள்ளக்கூடாது என்ற மனவுறுதி இயற்கையாக என் மனதில் இருந்து வருகிறது. ஆனாலும், தங்கள் ஒருவர் விஷயத்தில் மாத்திரம் என் புத்தி என்னை அறியாமல் மயங்கிப் போய்விட்டது. தாங்கள் நினைக்கிறபடி கடவுளே எங்கள் இருவரையும் எங்கள் தகப்பனாராகிய தங்களிடம் கொண்டுவந்து சேர்ப்பிக்கும் படி செய்திருக்க வேண்டுமென்றே நானும் அபிப்பிராயப்படுகிறேன்’ என்றாள்.

அதைக்கேட்ட இளவரசர் பெரிதும் பிரமிப்பும் வியப்பும் அடைந்து, ‘என்ன ஆச்சரியம் இது அம் மணிபாயியும்