பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 3O3 உறவினரென்று உலகத்தாருக்குத் தெரிந்தால், அதனால் தமக்கும் இழிவு ஏற்படுமென்றும் நினைத்து அவர் தம்முடைய பழைய பெயரை மாற்றி வைத்துக்கொண்டு இருந்து வருகிறார். சகலமான உத்தம லக்ஷணங்களும், மேன்மையான குணங்களும் அவர் ஒருவரிடத்திலேயே பூர்த்தியாக நிறைந்திருக்கின்றன வென்று சொல்லலாம். நம்முடைய ஷண்முகவடிவும் அதே மாதிரியான உயர்ந்த லக்ஷணங்கள் பொருந்தியவள். அவர்களிருவரும் ஒருவருக்கொருவர் தகுதியானவர்கள் என்று ஈசுவரனே அவர்களிருவரும் சந்தித்து அறிமுகம் செய்து கொள்ளும் படியான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தினார் என்று நான் நினைக்கிறேன். திருவாரூருக்கு அருகிலுள்ள ஒரு மடத்தி லிருந்த ஒரு பண்டாரம் திருவாரூருக்கு வந்துவிட்டுத் திரும்பி ஊருக்குப் போன ஷண்முகவடிவை ஏமாற்றித் தன்னுடைய மடத்துக்கு அழைத்துக்கொண்டுபோய், அவளைப் பலாத்காரம் செய்ய ஏற்பாடு செய்து கொண்டிருந்த சமயத்தில், இவர் தற்செயலாக அங்கே போய், அவளைக் காப்பாற்றி ஊருக்கு அழைத்து வந்தார். அதிலிருந்து இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்தச் சங்கதி எனக்கும் தெரிந்தது. முடிவில் அவர்களிருவருக்கும் ஒருவரை ஒருவர் கலியாணம் செய்து கொள்வதென்று தீர்மானித்தோம். அப்போதும் நான் இந்த வஞ்சகியான அம் மணிபாயியின் கொடிய வலையில் மீளமாட்டாமல் அகப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆகையால், என் தங்கையின் கலியாணத்துக்குக் கூட நான் வர இயலவில்லை என்று அவளுக்கு எழுத நேர்ந்தது. அதை நினைத்தால் இப்போதும் என் மனம் பதறுகிறது. அவர் நேரில் வந்து என்னை அழைத்துக்கொண்டு போவதற்காக இந்த ஊருக்கு வந்த இடத்தில் கூத்தாடி அன்னத்தம் மாளின் மகள் சிவபாக்கியம் அவரிடம் அகப்பட்டு அம் மணி பாயியின் சதியாலோசனையை வெளியிட, அவர் தம்முடைய கலியாணத்தை நிறுத்திவிட்டு தாதிப் பெண்களைப் பின்பற்றி கோலாப்பூர் வரையில் போனாரென்ற விவரமெல்லாம் -- V-2g.5.