பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3O4. பூர்ணசந்திரோதயம் - 5 அவரே இப்போது சொன்னாரல்லவா? அவ்விடத்தில் அந்தப்பெண்களுக்கு அவர் எவ்வளவோ நீதியும் நல்ல புத்தியும் புகட்டியும், அவர்கள் மாறுபடாமல் அவரையே மயக்கித் தங்களுடைய வலையில் போட்டுக்கொள்ள யத்தனித்தார்கள். அவர் திடமான மனமுடையவர் ஆகையால் இவர்கள் அவருடைய மன உறுதியை அசைக்கமுடியாமல் போயிற்று. அவரைச்சும்மாவிட்டுப் போனால், அவர்பூனாவுக்குப்போய், லலிதகுமாரி தேவியாரை நேரில் கண்டு எல்லா விஷயங்களையும் சொல்லி எச்சரித்து விடப் போகிறாரே என்று பயந்து உடனே அம் மணிபாயிக்கு ஆளை அனுப்ப அவள் உடனே பெரிய ராணியம் மாளிடம் தந்திரமாக ஒரு கடிதம் வாங்கிக் கொண்டு கோலாப்பூர் போய், அதை அந்த ஊரில் பெரிய ராணிக்குப் பழக்கமான போலீஸ் கமிஷனரிடம் கொடுத்து அவர் மூலமாக இவரைச் சிறைப்படுத்தி இவரிடத்தி லிருந்த சொந்தக் கடிதங்கள் முதலிய தஸ்தாவேஜிகளை எடுத்துப் படித்துப் பார்த்து, இவர் உண்மையில் இன்னார் என்பதையும் இவருடைய உண்மைப் பெயர் இன்ன தென்பதையும், இன்னம் மற்ற வரலாறு எல்லா வற்றையும் தெரிந்துகொண்டதன்றி, அந்தத்தாதிப் பெண்களுள் ஒருத்தியைச் சிறைச்சாலைக்குள்ளும் அனுப்பி அவருடைய மனதைக் கலைக்கப் பற்பல ஏற்பாடுகளைச் செய்தாள்; அதுவுமன்றி, அவர் ஷண்முகவடிவைக் காதலிக்கிறார் என்பதையும் கடிதங்களிலிருந்து தெரிந்து கொண்டாள். ஷண்முகவடிவு என்னுடைய தங்கை என்பதை அவள் ஏற்கெனவே என்னிடத்திலிருந்து தெரிந்து கொண்டிருந்தாள் ஆதலால், எனக்குத் தெரியாமல் அவளைத் திருவாரூரிலிருந்து கோலாப்பூருக்கு வருவித்து கலியாணசுந்தரம் பிள்ளை துன் மார்க்கத்தில் இறங்கிக் கெட்டுப்போய் விட்டதாக அவளுக்குக் காட்டி அவளுடைய மனதை மாற்றி அவளைத் தந்திரமாகத் தஞ்சைக்கு அழைத்து வந்து மருங்காபுரி ஜெமீந்தாரிடம் அவளை விட்டு அதனால் பெருத்த திரவியம் சம்பாதிக்க