பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 31 1 ரென்றே எண்ண வேண்டியிருக்கிறது. நான் இதுவரையில் அன்னிய மாதரைக்கண்டுதுர்மோகம்கொண்டு கெட்ட வழியில் பிரவர்த்தித்து வந்தேன். ஆதலால், அவர்களுக்குச் சொந்தமான புருஷர்களுடைய மனம் எப்படிக் கொதிக்கும் என்பதை நான் பிரத்தியrமாக அனுபவிக்கும் படி என் சொந்த குமாரத்தி களையே கடவுள் என்னிடம் கொணர்ந்துவிட்டு என்னை நிரம்பவும் கொடுமையாகத் தண்டித்து விட்டார். இந்தத் தண்டனை என் ஆயுட்காலபரியந்தம் போதுமானது. இதை நான் ஒரு நாளும் மறக்கமாட்டேன். இன்றோடு எனக்கு நல்ல புத்தி வந்தது என்று கூறி அபாரமான வெட்கமும்துக்கமும் அடைந்து தமது கைகளால் முகத்தை மறைத்துக்கொண்டு கண்ணிர் விடுத்துக் கலங்கி அழுதார்.

அதைக்கண்ட நீலமேகம் பிள்ளை இளவரசரை நோக்கி, ‘அப்படியானால், தாங்கள் ஷண்முகவடிவை இதற்குமுன் சந்தித்துப் பேசியிருக்கிறீர்கள் போலிருக்கிறது” என்றார்.

இளவரசர், ‘ஆம். இரண்டு மூன்று தினங்களுக்கு முன் ஹேமாபாயி என்ற ஸ்திரீஷண்முகவடிவை ஏமாற்றி என்னிடம் கொண்டுவந்துவிட்டாள். அப்போது நான் இவளோடு பேசி இவளை நான் கலியாணம் செய்து கொள்வதாகச் சொன்னேன். ஆகா! அப்போது இவள் சொன்ன நீதியும், காட்டிய கற்பின் உறுதியும் என்ன வென்று சொல்லுவேன் என்னிலும் வயசில் எவ்வளவோ சிறியவளான இந்தக் குழந்தை இவ்வளவு மன உறுதி உடையவளாய் இருக்க, குட்டிச் சுவர்போல வயது முதிர்ந்த நான் மனவுறுதியில்லாமல் சபலசித்தனாய்த் திரிவதை நினைக்க நினைக்க நானும் ஒரு மனிதனா என்ற எண்ணம் உதிக்கிறது’ என்றார். -

நீலமேகம்பிள்ளை, “இங்கே வந்த ஷண்முகவடிவு பிறகு எப்படிதங்களிடமிருந்து தப்பிப் போனாள்?’ என்றார்.

இளவரசர், ‘நான் அன்றையதினம் இரவில் இவளைக் கண்டு மறுநாளைக்குள் எப்படியும் இவள் என்னுடைய பிரியப்படி