பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 3.13 சாய்ந்தது. இவள் தன் கைப்பிடியை விடாமல் உறுதியாகவே இருந்தாளாம். இவள் இறங்கிய இடத்துக்கு எதிரில் என்னுடைய மாளிகை இருக்கிறது. குழாய் சுமார் 100 அடி உயரம் இருக்கலாம். அது என் மாளிகையில் வந்து படேரென்று சாய்ந்தது. குழாயின் முக்கால் பக்கத்தில் இந்தப் பெண்தொற்றிக் கொண்டிருந்தாள். இவள் இருந்த இடத்திற்குச் சமீபத்தில் மாளிகையின் இரண்டாவது மாடத்தின் ஜன்னல் இருந்தது. அதன் கம்பியை இவள் பிடித்துக்கொண்டு அடியில் சுவர் பிதுங்கி நீண்டிருந்த இடத்தில் கால்களை வைத்துக் கொண்டாள். அடுத்த கூடிணத்தில் குழாய் ஒரு பக்கமாகச்சாய்ந்து தரையில் விழுந்துவிட்டது. இந்தப் பெண் ஜன்னலின் கம்பியைப் பிடித்துக் கொண்டிராவிட்டால், இவளும் அடுத்த rணத்தில் குழாயோடு கீழே விழுந்து அதோகதியாய் ப் போயிருப்பாள். தெய்வமே இவளுக்குத் துணையிருந்து அளவற்ற மனோ தைரியத்தை இவளுக்குக் கொடுத்து அப்படிப்பட்ட பெருத்த அபாயத்திலிருந்து இவளைக் காப்பாற்றியது. இவள் வந்து தொற்றிக் கொண்டஜன்னலுக்குப் பக்கத்தில் என்னுடைய சயனம் இருந்தது. ஆகையால், நான் அதில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தவன் தகரக்குழாய் வந்து படேரென்று மோதிய ஓசையைக்கேட்டு விழித்துக்கொண்டு வெளியில் பார்த்தேன்; இந்தப் பெண் குழாயிலிருந்து தாவி சரேலென்று ஜன்னலைப் பிடித்துக்கொண்டு அடியிலிருந்த கட்டைச்சுவரில் கால்களை வைத்துக் கொண்டதும், குழாய் கீழே விழுந்ததும் தெரிந்தன. நான் உடனே திடுக்கிட்டுப் பதறிப்போய் சரேலென்று எழுந்து, அந்தப் பெண் கீழே விழுந்து விடுவாளோ என்று பயந்து கலவரமடைந்து, பக்கத்திலிருந்த என் வஸ்திரத்தை எடுத்து முறுக்கி வெளியில் விட்டு இவளுடைய இடுப்பைச் சேர்த்து ஜன்னல் கம்பிகளில் இறுக்கிக் கட்டிவிட்டு, பயப்படாமல் இருக்கும்படி இவளிடம் சொல்லிவிட்டு, நான் உடனே கீழே இறங்கி ஓடி, வேலைக் காரர்களை எழுப்பி நாலைந்து ஏணிகளை வரவழைத்து