பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314 பூர்ணசந்திரோதயம் - 5 ஒன்றாகச் சேர்த்துக்கட்டி முன்பக்கத்தில் வைத்து அது சாயாமல் பல இடங்களில் அதை ஜன்னல்களில் கட்டி, ஒர் ஆளை மேலே ஏற்றி இந்தப் பெண்ணை நிரம்பவும் ஜாக்கிரதையாக கீழே இறக்கிக் கொண்டுவரச்செய்து, இவளை என்னுடைய மாளிகைக்குள் அழைத்துக் கொண்டு போனேன். இவளுடைய உடம்பு கை கால்களெல்லாம் படபடத்து நடுநடுங்கிக் கொண்டிருந்தன. உடனே இவளுக்குத் தாகத்திற்கு தண்ணிர் கொடுத்து ஒரு பக்கத்தில் உட்கார வைத்து இவளுடைய வரலாறுகளை எல்லாம் கேட்டேன். இவள் முதலில் என்னிடம் உண்மையைச்சொல்ல பயந்தாள். இதற்கு முன் பல இடங்களில் முதலில் இவளைக் காப்பாற்றி நல்லவர்கள் போல நடித்தவர்கள் எல்லாம் முடிவில் இவளுடைய விஷயத்தில் துர் எண்ணங் கொண்டு வஞ்சித்துவிட்ட காரணத்தினால், இவள்தன் வரலாற்றைச் சொல்ல பயப்படுவதாகச் சொன்னாள். நான் அப்படிப்பட்ட மனிதனல்ல என்று உறுதிமொழி தந்து இவளைத் தேற்ற, இவள் என்னைத் தனியாக வைத்துக்கொண்டு தன்னுடைய வரலாறுகளை எல்லாம் தெரிவித்ததன்றி, முடிவில் தான் இளவரசரால் சிறை வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து குழாயைப் பிடித்துக்கொண்டு இறங்கியபோது, அது பிய்த்துக் கொண்டு என் வீட்டில் விழுந்த விவரத்தையும் சொன்னாள். அந்த வரலாற்றையும் கேட்டவுடனே என் மனம் பதறியது. இந்தப் பெண்ணுக்கு இப்படிப்பட்ட துன்பங்கள் நேர்ந்தனவே என்ற இரக்கமும் துயரமும் என் மனசில் குடிகொண்டது. நான் உடனே இந்தப் பெண்ணைத் தேற்றி, சில தினங்கள் வரையில் என் மாளிகையில் இருந்தால், நான் கமலத்தைத் தேடிப் பிடிப்பதாகச் சொல்ல, இவளும் அதற்கு இணங்கினாள். அன்றைய தினம் இரவில் நான் இன்னொரு காரியமும் செய்தேன். அரண்மனையில் இருப்பவர்கள் மறுநாள் இவளை எப்படியும் தேடுவார்கள் ஆகையால், தகரக் குழாய் விழுந்திருப்பதிலிருந்து இவள் அதன் மூலமாக வந்து என் வீட்டிலிருக்கிறதாக யூகித்துக் கொண்டால், மறுபடி இளவரசர்