பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 பூர்ணசந்திரோதயம் - 5 குடும்ப காரியத்தை ஒழுங்காக நடத்துகிறீர்களோ?’ என்று நான் கூறிக் கோபநகை செய்தேன். என் வருகையை அந்த அகாலத்திலும், அவ்வளவு சீக்கிரத்திலும் எதிர்பாராதவர்களான அந்தக் கள்ளக் காதலரிருவரும் உடனே திடுக்கிட்டு நடுநடுங்கிப் போய்ச் சுருட்டி வாரிக்கொண்டு எழுந்தனர். நான் வந்து உண்மையைக் கண்கூடாகக் கண்டுவிட்டேன் என்பதை அவர்கள் உணரவே, அவர்களது மனதில் அபாரமான திகிலும் கலவரமும் உண்டாகிவிட்டன. இருவரது தேகமும் பயத்தினால் வெடவெடவென்று ஆடுகிறது. முகத்தில் பிரேதக்களை உண்டாகிவிட்டது. இளவரசரது எண்சாண் உடம்பும் ஒரு சாணாகக் குன்றிப்போய் விட்டது. தாங்கவொண்ணாத பெருத்த கிலியினால் என் மனைவியின் உயிர் அநேகமாய் அப்போதே போய்விட்டதென்று சொல்ல வேண்டும். அவர்கள் இருவரும் அந்த மகா விபரீதமான நிலைமையில் தாங்கள் என்ன செய்வதென்பதை உணராதவர்களாய் சிறிது நேரம் மெளனமாக நின்று நாணித் தலைகுனிந்து தமது உடைகளைச் சீர்திருத்திக் கொண்டனர். அடுத்த கூடிணத்தில் இருவரும் முன்னால் வந்து வேரற்ற மரம்போல என் காலடியில் சாஷ்டாங்கமாக விழுந்து, தாங்கள் தெரியாத் தனத்தினால் செய்த காரியத்தை மன்னித்துத் தங்களுடைய மானத்தையும் உயிரையும் காப்பாற்றும் படி வேண்டிக்கொண்டனர். நான் உடனே இளவரசரைப் பார்த்து, “ஐயா! இளவரசரே எழுந்திரும். நீர் எப்படிப்பட்ட பெரிய குற்றம் செய்திருந்தாலும் நீர் சர்வேசுவரனாகிய கடவுளின் காலில் மாத்திரம் விழுந்து கும்பிடத் தகுந்தவரே அன்றி, என்னைப் போன்ற சாதாரண மனிதர் காலில் விழுவது கொஞ்சமும் தகாத காரியம். இப்படிச் செய்வது, உம்முடைய ராஜ பதவிக்கு முற்றிலும் இழுக்கானது. இதனால் எனக்கும் பெருத்தபாவம்சம்பவிக்கும் என்றே நான் எண்ணுகிறேன். இந்த நாட்டின் பிரஜைகள் ஒருவருக்கொருவர் தீங்கும் அக்கிரமமும் செய்து கொள்ளாமல்தடுத்துக்காப்பாற்ற வேண்டியவராகிய நீர் வேலியே பயிரை அழிப்பதுபோல இப்படிப்பட்ட காரியத்தில்