பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 323 விடுவித்து அழைத்து வரும்படி நான் சொன்னதாகச் சொல்லி, தனிமையாக அழைத்துவந்து ஷண்முக வடிவு இங்கே வந்திருக்கும் செய்தியையும் இப்போது நான் சொன்னபடி உங்களுடைய குடும்ப வரலாற்றையும் நாம் இப்போது நடத்த உத்தேசிக்கும் கலியான ஏற்பாட்டையும் தெரிவித்து அழைத்துக் கொண்டுவந்து ஷண்முகவடிவும் அவரும் சந்தித்துப்பேசும்படி செய்யும்’ என்றார்.

அப்படியே செய்வதாக நீலமேகம்பிள்ளை ஒப்புக்கொண்டு. அவ்விடத்தைவிட்டு வெளியில் சென்றார். பிறகு இளவரசர் ரrாமிர்தம் ஜெமீந்தாரோடு அரைநாழிகை சாவகாசம் தனியாக இருந்து கலந்து பேசி அவர் கமலத்தை மணந்து கொள்வதற்கு இணங்கும் படி செய்தார். அவ்விடத்தைவிட்டுச் சென்ற நீலமேகம்பிள்ளை கமலம், ஷண்முகவடிவு ஆகிய இருவரும் இருந்த இடத்தை அடைந்து, இளவரசர் கூறிய விஷயங்களைத் தெரிவித்து அவர்களை எச்சரித்துவிட்டு, கலியாணசுந்தரம் சிறைப்படுத்தப்பட்டிருந்த இடத்திற்குப் போய், இளவரசர் ஆக்ஞாபித்ததாகக் கூறி, அவனை விடுவித்து அழைத்துக் கொண்டு வந்து ஒரு தனியான இடத்திலிருந்து, ஷண்முகவடிவு வந்திருக்கும் விஷயத்தையும், அவளும் கமலமும் தமது தங்கைகள் என்ற செய்தியையும், அப்போது நடக்கப்போகும் கலியான ஏற்பாட்டையும் இன்னம் கலியாணசுந்தரம் தெரிந்து கொள்ளவேண்டிய சகலமான விருத்தாந்தங்களையும் தெரிவித்தார். அந்த எதிர்பாராத சந்தோஷச் செய்திகளைக் கேட்ட கலியாணசுந்தரம் அது பொய்யோ மெய்யோ என்று அயிர்த்தவனாய், சகிக்கவொண்ணாப் பெருமகிழ்ச்சியும் பூரிப்பும் அடைந்து, தனது வருகையை எதிர்பார்த்து ஷண்முக வடிவு தனிமையில் காத்திருந்த இடத்தை அடைந்தான். அடையவே ஒருவரையொருவர் விட்டு நெடுங்காலமாக பிரிந்திருந்த உண்மைக் காதலர்களான அவ்விருவரும் எவ்விதமான ஆனந்தம் அடைந்திருப்பார்கள் என்பதை