பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் r 29 இறங்கலாமா? அதிலும், உம்மை உயிருக்குயிராக மதித்திருக்கும் ஆப்த சிநேகிதனுடைய மனைவி பெற்ற தாய்க்குச் சமானமென்பதை நீர் அறியாதவரா? உம்முடைய மனைவியும் நானும் இப்படிப்பட்ட நிலைமையிலிருக்க நீர் அங்கே வந்திருந்தால் உம்முடைய மனநிலைமை எப்படி இருந்திருக்கு மென்பது உமது மனதிற்குப் படவில்லையா? அயலான் மனைவியின்மேல் ஆசை கொள்கிறவன் தன் மனைவியைக் கண்டு இன்னொருவன் அப்படி ஆசைப் பட்டால், அது தனக்கு எப்படி இருக்குமென்பதை முதலில் யோசித்துப் பார்க்க வேண்டியது அவசியமல்லவா. இப்படிச் செய்தது இந்த ஊரை ஆள இருக்கும் மகாராஜாவா இல்லாமல் வேறே யாராக இருந்தாலும் இந்நேரம் நான்கத்தியால் இரண்டு துண்டாக வெட்டிப் போட்டிருப்பேன். இவ்வளவு பெரிய ராஜ்யத்தின் தலைவன் என் காலில் விழுந்து வேண்டுவதைக் கருதியும், நமது ஆழ்ந்த சிநேகத்தைக் கருதியும், நான் இவ்வளவு ஆச்சரியகரமான பொறுமைக் குணத்தை வகித்திருக்கிறேன். நீர் இனி ஒருகrண நேரங் கூட என்னுடைய மாளிகைக்குள் இருப்பது கூடாது. நீர் எழுந்து வெளியில் போகலாம். இனி என் உயிர் உள்ளவரையிலும், உம்முடைய உயிர் உள்ளவரையிலும் நாம் ஒருவர்முகத்தில் ஒருவர்முழிக்கக்கூடாது. இது உறுதியான வார்த்தை’ என்று முற்றிலும் அருவருப்பாகப் பேசினேன். இளவரசர் சகிக்கவொண்ணாத பிரமாதமான அவமானமும் சங்கடமும் அடைந்தவராய் முற்றிலும் குன்றிப் போய் என் முகத்தைப் பார்க்கக் கூசினவராய், மெதுவாக எழுந்து அந்த அறையைவிட்டு வெளியில் போய் நேராகக் கீழே இறங்கி அந்த அர்த்த ராத்திரியில் தனியாக நடந்து பல வீதிகளையும் கடந்து அரண்மனை போய்ச் சேர்ந்துவிட்டார். -

அதன்பிறகு என் மனைவியோடு முகங்கொடுத்துப் பேசவே

எனக்கு அருவருப்பாக இருந்தது. அதுவுமன்றி, தேகபலத்திலும் மனோ பலத்திலும் அற்பத்தன்மை வாய்ந்தவளாகக்