பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 பூர்ணசந்திரோதயம் - 5

இளவரசர் மேலும் பேசத் தொடங்கி, ‘முதலில் உங்களுக்கு நான் இன்னொரு சந்தோஷச் செய்தியைத் தெரிவித்துக் கொள்ள நினைக்கிறேன். அதாவது, பூனா விலுள்ள நம்முடைய பட்டமகிஷியின் மேல் ஏற்பட்டது முற்றிலும் அபாண்டமான அவதூறு என்பதும் அவள் மகா சிரேஷ்டமான புனிதவதி என்பதும் நிச்சயமாகத் தெரிந்து போயின. இப்போது இங்கே வந்து பேசிய அம்மணிபாயும், சாமளராவும் சேர்ந்து பட்டமகிஷியை விலக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு செய்த சதியாலோசனையினால் இந்த அபவாதம் ஏற்பட்டதென்பதும் நன்றாக விளங்கிவிட்டது. அவர்கள் அம்மன்பேட்டையிலுள்ள அன்னத்தம்மாளின் பெண்களையும், தங்கையையும் பூனாவில் தாதிவேலைக்கு அனுப்பி அவர்களைக் கொண்டு எனக்குக் கடிதம் எழுதச் செய்து நான் போய் ப் பார்த்த காலத்தில் உண்மையிலேயே கர்ப்பிணியாக இருந்த அம்மாளு என்ற கூத்தாடிப்பெண் பட்டமகிஷியின் ஆடையாபரணங்கள் முடி முதலியவைகளை அணிந்து வேஷம்போட்டுக்கொண்டும், அன்னத்தம்மாளுடைய தங்கை மோகனராவைப் போல ஆண் வேஷம் போட்டுக் கொண்டும் வந்து நடித்தார்களாம். அப்போது முன்னிரவு வேளையாகையால், நான் ஒளிந்துகொண்டு பார்த்தேன். ஆகையால், அதை நான் உண்மை என்றே நம்பி ஏமாறிப் போய்விட்டேன். கொஞ்சநேரத்திற்குமுன்நான் பூனாவுக்கு ஓர் உத்தியோகஸ்தனை அனுப்பி விட்டேன். இந்த விவரங்களை எல்லாம் பட்டமகிஷிக்குத் தெரிவித்து அந்த நான்கு தாதிகளையும் விலங்கிட்டு உடனே இங்கே அனுப்பும் படியும், பட்டமகிஷியிடம் எனக் கிருந்த கோபம் நீங்கி விட்டது ஆகையால், அவள் திரும்பிவந்து என்னோடு அன்னியோன்னி யமாக இருக்கலாம் என்றும் நிருபம் எழுதி அனுப்பி விட்டேன். அதுவுமன்றி, இத்தனை மோசங்களுக்கும், துன்பங்களுக்கும் ஆதாரபூதமாயிருந்த அம்மணிபாயியும், சாமளராவும் கலியாணத்திற்காக வந்திருந்த கூத்தாடி அன்னத்தம்மாளும்