பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 327

இதோ விலங்கிடப்பட்டுச் சிறைச்சாலைக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலைமையில் நான் மறுபடியும் கலியாணம் செய்துகொள்வது அக்கிரமச் செய்கை, ஆகையால், நான் இந்தக் கலியாணத்திலிருந்து விலகிக் கொள்வதைப் பற்றி நீங்கள் விசனப்படுவதை விட்டு பெரிதும் சந்தோஷமே அடைவீர்களென்று நம்புகிறேன். அதுநிற்க, இப்போது இங்கே வந்திருந்த பூர்ணசந்திரோதயம் என்ற பெண் உண்மையில் தார்வார் தேசத்து ராஜகுமாரி அல்ல. அவள் இப்போது வந்த நம்முடைய பவானியம்பாள்புரம் ஜெமீந்தா ராகிய நீலமேகம் பிள்ளையின் தங்கை. அவருக்கு இரண்டு தங்கைகள் இருக்கிறார்கள். இருவரும் அவர் தகப்பனாருடைய மூத்த சம்சாரத்தின் குழந்தைகளாம். இளைய சம்சாரத்தின் பகைமையைக் கருதி, அவர்களுடைய தகப்பனார் அந்தப் பெண்களை திருவாரூருக்கு அருகில் ஏதோ ஓரிடத்தில் ரகசியமாக வைத்திருந்தாராம். அந்தப் பெண்களுள் மூத்தவ ளாகிய கமலம் என்பவள் தனது தகப்பனாரைத் தேடிக்கொண்டு இந்த ஊருக்கு வந்திருந்த காலத்தில், அம்மணிபாயி முதலியோர் அவளை ஏமாற்றி, அவளுக்குப் பூர்ணசந்திரோதயம் என்று பெயர் கொடுத்து, அவளை என் பட்டமகிஷியாக்க முயன்றார்கள். நீலமேகம் பிள்ளைக்கு இந்தச் சங்கதியே தெரியாது. அவர் தற்செயலாகக் கலியாணத்திற்கு வந்தவர், ராஜஸ்திரீயைப் பார்க்கக் கூடாதென்ற எண்ணத்தோடு கடைசிவரையில் பார்க்காமல் இருந்தாராம். இவருக்கு முன் வந்தவர் இவள் கமலம் என்று சொன்னதைக் கேட்டு நிமிர்ந்து பார்த்து உடனே உண்மையை உணர்ந்து கலியாணத்தைத் தடுத்தார். ஏனென்றால் நான் மகாராஷ்டிர வம்சம். அவர்கள் பிள்ளை வம்சம். ஆகையால், அந்தப் பெண்ணை நான் கலியாணம் செய்து கொள்ள முறையில்லை அல்லவா, ஆகவே, அவர் எழுந்து தடுத்தார். இந்தப் பெண் தம்முடைய தங்கை யென்று சொன்னால், அதனால் தமக்கு அவமானமும் பழிப்பும் ஏற்படுவதோடு இதுவரையில் தம்முடைய