பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 329 இருக்குமென்ற காரணத்தையும், நீங்கள் எல்லோரும் ஏமாற்றம் அடையாமல் சந்தோஷமாய்ப் போகவேண்டும் என்பதையும் கருதி, நான் அந்த இரண்டு பெண்களின்கலியாணத்தையும் இதே முகூர்த்தத்தில் நடத்திவைக்கத் தீர்மானித்து விட்டேன். நீங்கள் எல்லோரும் இன்னம் கொஞ்சநேரம் விஜயம் செய்திருந்து தம்பதிகளை ஆசீர்வதித்து பந்தி போஜனம்செய்து எங்களைக் கெளரவித்துவிட்டுப் போகும்படி கேட்டுக் கொள்ளுகிறேன். அந்தப் பெண்கள் இருவரையும் கலியாணம் செய்து கொள்ளப் போகிறவர்கள் யார் என்று அறிய நீங்கள் பிரியப்படலாம். கொஞ்ச நேரத்துக்கு முன் வந்து இந்தக் கலியாணத்தைத் தடுத்தாரே அவர் இந்தக் கமலத்தின் தங்கையை கட்டிக் கொள்வதென்று ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டிருக்கிறதாம். மூத்தவளான இந்தக் கமலத்திற்கு கொஞ்ச நேரத்துக்கு முன்புதான்புருஷர்நிச்சயம் செய்யப்பட்டார்; அவர் நம்முடைய ரrாமிர்தம் ஜெமீந்தாரே. அவருடைய மேலான குணமும், பரிசுத்த நடத்தையும் உங்கள் எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆகையால், அவரே இதற்கிணங்குவதிலிருந்து, இந்தப் பெண்ணின் மீது அற்பமும் சந்தேகத்திற்கு இடமில்லை என்றே நீங்கள் கொள்ளவேண்டும். இவ்வளவே செய்தி. நேரமாகிறது. பிள்ளைகளும் பெண்களும் இந்நேரம் அலங்காரம் செய்து கொண்டு ஆயத்தமாக இருப்பார்கள்; ஆகையால், நாம் காலஹரணம் செய்யாமல், அவர்களது பிரியத்தை நிறைவேற்றி வைப்போம்” என்று மிகுந்த குதூகலத்தோடு கூறினார்.

அவரது சொற்களைக் கேட்ட மகா ஜனங்கள் எல்லோரும் பெருத்த கரகோஷம் செய்து தங்களது பெருங்களிப்பையும் திருப்தியையும் வெளியிட்டனர். - -

அடுத்த rணத்தில் முறையே ரrாமிர்தம் ஜெமீந்தார், கமலம், கலியாணசுந்தரம், ஷண்முகவடிவு ஆகிய நால்வரும் கலியான கோலத்தோடு சர்வாலங்கார பூஜிதராய் அழைத்து வரப்பட்டு, நான்கு உன்னத ஆசனங்களில் உட்கார

வைக்கப்பட்டனர்.