பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 பூர்ணசந்திரோதயம் - 5 அவ்வாறு தோன்றிய இரட்டைத் தம்பதிகளின் அற்புத தேஜசையும் கண்கொள்ளா வடிவழகையும் கண்ட மகா ஜனங்களெல்லோரும் திக் பிரமை கொண்டு மதிமயக்க மடைந்து, அந்த அதிசுந்தர யெளவன வதுவரர்கள் கந்தருவ லோகத்தைச் சார்ந்தவர்களோ, அல்லது, அழகிற்கே தனிப் பீடிகையான ரதிமதனர்களோ வென்று சந்தேகித்து அளவற்ற ஆனந்தமும் குதூகலமும் அடைந்து அவர்கள் மீது வைத்த விழியை எடுக்கமாட்டாமல் சுவர்க்க லோகத்தையே நேரில் காண்பவர் போல பேச்சு மூச்சற்று ஒடுங்கி ஸ்தம்பித்து இன்பமும் வியப்புமே வடிவாக வீற்றிருந்தனர். மேள வாத்தியங்களின் இன்னொலியும், வீணை, புல்லாங்குழல், கேளிக்கை முதலியவற்றின் தெய்வகானமும், பாடகர்களின் கீத முழக்கமும்,பேரிகை, முரசு, டமரிகை, நகார் முதலியவற்றின் பேரிடி முழக்கமும் ஒன்றுகூடி அண்டம் செவிடுபட ஆர்ப்பரிக்க, அந்தணர்களின் மந்திரகானத்தினிடையில் நிகரற்ற உத்தமகுண செளந்தர்ய பராக்கிரமசாலிகளான ரக்ஷாமிர்தம் ஜெமீந்தாரும் கலியாணசுந்தரமும் முறையே கமலத்திற்கும், ஷண்முகவடிவிற்கும் திருமாங்கல்ய தாரணம் நிறைவேற்றி னார்கள். அன்று முதல் ஐந்துநாட்கள் வரையில் அரண் மனையில் மகாஜனங்களுக்குப் பந்திபோஜனம் சம்பிரமமாக நடைபெற்றது. ஓயாமல் வாத்தியக் கச்சேரிகளும், தாசிகளின் நடனமும், சங்கீத கானங்களும், மல் லக ஜெட்டிகளின் யுத்தங்களும் இரவு வேளைகளில் சிறப்பான ஊர்கோலமும், பாணவேடிக்கைகளும் கதா காலrே:பங்களும் நடைபெற்று ஜனங்களின் மனதை ரஞ் சிக்கச் செய்து கொண்டிருந்தன. இளவரசர், நீலமேகம் பிள்ளை ஆகிய இருவரும் அளவற்ற குதுரகலமும் மனமகிழ்ச்சியும் பூரிப்பும் தோற்றுவித்தவர் களாய் குழந்தைகள் போல மாறி எல்லா விளையாடல்களிலும் கலந்து கொண்டு சந்தோஷ நிறைவாகவே தோன்றினர்.