பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 333 உன்னத பதவியைக் குறித்து மட்டற்ற ஆனந்தமும் பூரிப்பும் அடைந்தவளாய்ப் புன்னகை செய்துகொண்டிருந்தாள்.

அப்போது இளவரசர், ‘'ஹா என்ன ஆச்சரியம் இவர் நம்முடைய மருங்காபுரி ஜெமீந்தாருடைய தம்பியின் குமாரரா? கமலம் அன்றையதினம் மருங்காபுரி ஜெமீந்தாரையா குறித்துப் பேசினாள்? பேஷ்! நம்முடைய ஷண்முகவடிவின்அதிர்ஷ்டமே அதிர்ஷ்டம்! அவளுக்கு வாய்த்த புருஷர் ஏழை வம்சத்தைச் சேர்ந்தவராக இருக்கிறாரே என்ற எண்ணம் இதுவரையில் என் மனசுக்குள்ளாகவே ஒரு பக்கத்தில் இருந்து வந்தது. இப்போது தான் என் மனம் குளிர்ந்தது. அவருடைய தம்பி குழந்தைக்குக் கலியாணராமன் என்றல்லவா பெயர் வைத்திருந் தார்கள். ஒகோ அதை மாற்றி இவர் கலியாண சுந்தரமென்று வைத்துக்கொண்டாரோ கிழவருடைய நடத்தை இவருக்குக் கொஞ்சமும் பிடிக்காமையால், அவருடைய சம்பந்தமே இல்லாமல் புது மனிதன்போல இருக்க வேண்டுமென்று இவர் தம்முடைய பெயரையே மாற்றிக் கொண்டு திருவாரூரில் இருந்து வருவதாகக் கமலம் சொன்னாள் அல்லவா, சரிதான். இப்போதுதான் பொருத்தமாக இருக்கிறது. ஆம். அதிருக்கட்டும். இன்ஸ்பெக்டரே நீர் ஐந்து தினங்களாக இங்கேயே இருக்கிறீரே நீர் அவரிடம் எப்போது போனிர் இந்த மாதிரி கலியாணம் ஆகிறதென்கிற சங்கதி அவருக்குத் தெரியுமா?’ என்றார்.

இன்ஸ்பெக்டர், ‘மகாராஜாவே கொஞ்ச காலத்திற்குமுன் அந்த ஜெமீந்தாருடைய மாளிகையில் கட்டாரித்தேவன் என்ற பிரபலத் திருடன் புகுந்து, வீட்டின் ஒரு பாகத்தில் நெருப்பை வைத்துவிட்டு அவருடைய தம்பி மகளான லீலாவதி என்ற பெண்ணையும் தூக்கிக்கொண்டு போய்விட்டான். அதன்பிறகு நானும் இந்த நீலமேகம் பிள்ளையும் அவரிடம் போய் ப் பார்த்தபோது, அவர் எல்லா விவரங்களையும் ஒரு காகிதத்தில் எழுதி என்னிடம் கொடுத்தார். லீலாவதியை மீட்கும்படியும்,