பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 பூர்ணசந்திரோதயம்-5 இந்தக் கலியாணராமபிள்ளையைக் கண்டுபிடித்துச் சகலமான சொத்துகளையும் இவரிடம் ஒப்புவிக்கும் படி அவர் எழுதியிருந்தார். நான் இதற்குமுன் இவரை ஒருதரம் தான் பார்த்திருக்கிறேன். முன்பு தினசரி டைரி காணாமல் போனபோது அதை அந்தத் திருடன் திருப்பிக் கொடுப்பதாகச் சொல்லியிருந்த தினத்தன்று அவனுடைய அடையாளம் கண்டுபிடிப்பதற்காக நான் ஒரு பிச்சைக்காரனைப் போல வேஷம்போட்டுக்கொண்டு ரஸ்தாவில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். அன்றையதினம் இவர், லீலாவதி, அம்மணி பாயி ஆகிய மூவரும் ஒருவர் பின்னொருவராக அந்த மாளிகைக்கு வந்துபோனார்கள். அப்போது நான் இவரைப் பார்த்து இவருடைய அடையாளத்தைத் தெரிந்து கொண்டி ருக்கிறேன். பிறகு இந்தக் கலியாணம் நடந்த முதல் தினம் இவர் வந்து கலியான மண்டபத்தில் உட்கார்ந்தவுடன் நான் இவருடைய அடையாளத்தைக் கண்டுகொண்டு அன்றைய தினம் இரவில், நான் போய் இந்தச் சங்கதியைக் கிழவரிடம் சொன்னேன். அவர்நிரம்பவும் சந்தோஷமடைந்து, கலியாணம் முடிந்தவுடன் தம்பதிகளை அழைத்துவரச் சொன்னார். அதுவுமன்றி சில தினங்களுக்குமுன் நான் என்னுடைய ஜெவான்களை அழைத்துக்கொண்டு காசா நாட்டுக்குப்போய் அந்தக் கட்டாரித்தேவனைப் பிடிக்க யத்தனித்தேன். அவன் எங்கேயோ போய் ஒளிந்து கொண்டான். அவன் அபகரித்துக் கொண்டுபோன கோடி ரூபாய் பெறுமான ஆபரணங்களையும், லீலாவதியையும் நான் கண்டுபிடித்து மீட்டுக்கொண்டு முன்னாக வந்துவிட்டேன். நான் அங்கேயே வைத்துவிட்டு வந்த ஜவான்கள் நேற்று ராத்திரி அந்தக் கட்டாரித் தேவனைப் பிடித்து விலங்கிட்டு விடியற் காலையில் என்னுடைய ஜாகைக்குக் கொண்டு வந்தார்கள். நான் உடனே அவனைச் சிறைச்சாலையில் பந்தோபஸ்து செய்துவிட்டு மருங்காபுரி ஜெமீந்தாரிடம் போய் இந்தச்செய்தியைச் சொல்லி