பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 33 இருக்கிறேனென்று அவள் நினைத்துக் கொண்டாளாம். அதன்பிறகு சமயம் வாய்த்த போதெல்லாம் இளவரசர் அவளிடம் போய் சந்தோஷமாக இருந்து விட்டு வந்தாராம். கடைசியில் அவர்களிருவரும் ஒரு நாளிரவு ஒன்றாக சயனித்திருந்ததை நான் கண்டு இளவரசரைக் கண்டித்துத் துஷித்த பிறகே, அவள் உண்மையை யூகித்துக்கொண்டு அந்த வேலைக்காரியை அழைத்துக் கேட்க, அவள் தான் செய்ததெல்லாம் நிஜ மென்று சொல்லிவிட்டு, உடனே மாளிகையைவிட்டுப் போனவள் மறுபடி வேலைக்கு வராமல் ஊரை விட்டே ஓடிப்போய் விட்டாளாம். அவள் இறப்பதற்கு முன் இந்தச் சங்கதிகளையெல்லாம் மெய்ப்பிப்பதற்கே தான் தன்னிடம் வரவேண்டுமென்று கேட்டுக் கொண்டாளாம். அந்தத் தாதி கொணர்ந்து அவளிடம் கொடுத்த கடிதத்தை அவள் தன்னுடைய பெட்டியில் பத்திரமாகப் பூட்டி வைத்திருப்ப தாகவும் அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தாள். அதுவுமன்றி, அவள் முடிவாக இன்னொரு விஷயமும் எழுதியிருந்தாள். நீலமேகன் ஒருவனே எனக்குப் பிறந்தவனென்றும், அதன்பிறகு பிறந்த பெண் குழந்தைகளிரண்டும் இளவரசருடைய குழந்தைகளென்றும், பிறருடைய வஞ்சகத்தால் ஏமாறிப் போய்த் தான் கெட்டுப் போயிருந்தாலும், இனி தான் என்னுடைய முகத்தில் விழிப்பதற்கே அருகமற்றவளாய்ப் போய் விட்டபடியால் தான் உயிர் துறந்து எமதண்டனை அடைந்து, தனது பாவத்தையும் களங்கத்தையும் போக்கிவிட்டு மறுபடியும் பரிசுத்தமான தேகத்தோடு மறுஜென்மத்தில் வந்து என்னிடம் சேர்வதாகவும் அவள் எழுதியிருந்தாள். அதைப் படித்தபோதுதான், என்மனம் பதறிப் போய்விட்டது. கண்களில் கண்ணிர் தானாகப் பொங்கி வழிந்தது. என் மனைவியைக் கெடுத்து, அவளுடைய உயிரையும் குடித்து, எங்களுடைய குடும்ப வாழ்க்கையையும் நிகரற்ற சுகங்களையும் கெடுத்த படுபாவியாகிய இளவரசனுடைய உயிரை வாங்கிவிட வேண்டுமென்ற வீராவேசமும், ஆக்குரோஷமும் என் மனதில்