பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

s 4 பூர்ணசந்திரோதயம் - 5 கொந்தளித்து எழுந்தன. ஆனாலும், நான் அவைகளை அந்தச் சமயத்தில் வெளியில் காட்டாமல் அடக்கிக்கொண்டு, அவளால் குறிக்கப்பட்டிருந்த பெட்டியைத் திறந்து அங்கிருந்த கடிதத்தை எடுத்துப் பார்த்தேன். அது நான் எழுதியதுபோலவே இருந்தது. அதை நான்தான் எழுதி இருப்பேனோ என்ற சந்தேகம் என் மனசிலேயே உண்டாயிற்று. அதிலிருந்த விஷயங்களெல்லாம் அவள் விவரித்த மாதிரியே இருந்தன. ஆகையால், நான் அவள் சொன்ன வரலாற்றை எல்லாம் உண்மையென்று நம்பி, அவள் நிரபராதியென்றும், அநியாயமாக இளவரசருடைய மோசத்தி னாலும், அவள் என் மேல் வைத்திருந்த அளவற்ற வாஞ்சையி னாலுமே, அவள் அந்தக் குற்றத்தைச் செய்ய நேர்ந்தது என்றும் முடிவு செய்து கொண்டு,அதன் பிறகு அவளுடைய பிரேதத்தை அதிக விமரிசையாக எடுத்துப்போய் தகனம் செய்து உத்தர கிரியைகளையெல்லாம் அமோகமாகவும் வெகு சிறப்பாகவும் நடத்திவைத்தேன்.

அதன்பிறகு அதே விசனமாகிய கடலில் நான் ஆழ்ந்து போய், அன்னம் ஆகாரம் முதலிய எதையும் நாடாமல் அகோராத்திரம் துக்கமாகிய பெரும் பேயினால் உலப்பப்பட்டவனாக இருந்ததன்றி, இனி அவளுக்கு நிகரான பெண்ணே கிடைக்க மாட்டாள் ஆதலால், இனி நான் வேறு கலியாணமே செய்து கொள்ளுகிறதில்லை என்று தீர்மானித்துக் கொண்டேன். அதுவுமன்றி, என் மனைவியின் விஷயத்தை மறந்துவிட வேண்டுமென்ற ஒரு முடிவையும் செய்து கொண்டேன். இளவரசருக்குப் பிறந்த இரண்டு பெண்களையும் நான்பார்க்கும் போதெல்லாம், என் மனைவிக்கு நேர்ந்த கெடுதல் நினைவிற்கு” வருமென்று நினைத்து, நான் அவர்களை வேறே இடத்தில் தனிய்ாக வைத்துவிட எண்ணினேன். என்னுடைய ஒன்றுவிட்ட அத்தை ஒருத்தி திருவாரூருக்கருகில் இருக்கிறாள். அவளுடைய பெயர் நீலலோசனி. அவளை வரவழைத்து, அவளிடம் அந்த இரண்டு பெண்களையும் ஒப்புவித்து வளர்த்து வரும் படி