பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41-வது அதிகாரம்

கட்டாரியின் கடைசி வேட்டை

கட்டாரித்தேவன் லீலாவதியையும் திரவிய மூட்டையையும் எடுத்துக்கொண்டு வெளியில் போன காலத்தில், விசைவைத்த நாற்காலியில் மாட்டப்பட்டிருந்த மருங்காபுரி ஜெமீந்தார், தாம் கூச்சலிட்டால் அந்த முரட்டுத் திருடன் மறுபடிவந்து தம்மைக் கொன்று போட்டுவிடுவானோ என்று பெரும் பீதி அடைந்தவராய், அரைநாழிகை சாவகாசம் வரையில் வாயைத் திறவாமல் மெளனமாகவே இருந்தார். நாற்காலியின் இரும்பு விசைகள் அவரது உடம்பையும் கை கால்களையும் இறுகப் பிடித்துக் கொண்டு அங்கங்கு இரத்த ஓட்டத்தைத் தடைப்படுத்திக்கொண்டிருந்தன. ஆதலால், அவரது உடம்பு முழுதும் மரத்து விறைத்து ஜில்லிட்டு மரண வேதனை உண்டாகிக்கொண்டிருந்தது. தாம் வாய்விட்டுக் கதறி அழ வேண்டுமென்றும், பெருங்கூச்சல் செய்து யாரையாவது அழைக்க வேண்டுமென்றும், அவரது மனம் தூண்டியது. ஆனாலும், திருடன் அப்போதும் தமது மாளிகைக்குள் இருப்பானாகில், அவன் உடனே திரும்பி வந்து குரவளையைப் பிடித்து அழுத்தித் தம்மை ஒரு rணத்தில் கொன்று போட்டு விடுவான் என்ற பெருந் திகில் அவரது தேக பாதைகளைவிட அதிக வலுவாக உபத்திரவித்தது. ஆகையால், அவர் தமது நரகவேதனையைப் பொறுத்துக்கொண்டு சுமார் அரைநாழிகை சாவகாசம் வாளாவிருந்தார். தம்மால் வெளியில் அனுப்பப் பட்ட ஷண்முகவடிவு அந்த விஷயத்தை வேலைக்காரர் களுக்குத் தெரிவித்து அவர்களை உதவிக்கு அனுப்புவாள் என்று அவர் எதிர்பார்த்ததும் வீணாயிற்று. அந்த மெல்லிய மடந்தை திகிலடைந்து எவ்விடத்திலாகிலும் ஒளிந்து கொண்டிருப்பாள் என்ற எண்ணம் உண்டாயிற்று. கடைசியில் அந்த முரட்டுத் திருடன் பயமுறுத்தி விட்டுப் போனபடி அவன் லீலாவதி