பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 பூர்ணசந்திரோதயம் - 5 வேலைக்காரர்கள் எண்ணிக்கொண்டு தங்களது கவனத்தை வேறு விஷயங்களில் செலுத்தி இருந்தனர்.

காலை பத்துமணிநேரமாயிற்று. அப்போதும் மேன்மாடத்தி லிருந்த மனிதர் வெளிப்படவில்லை. அதற்குமுன் ஜெமீந்தார் எத்தனையோசந்தர்ப்பங்களில் இரவு முழுதும் பல மனிதருடன் குதுகலமாக விழித்திருந்து அலுத்துத் துங்கி பொழுது விடிந்து வெகு நேரத்திற்குப் பிறகு எழுந்திருக்கும் வழக்கம் இருந்தது. ஆனாலும் அவர் அவ்வளவு அகாலம் வரையில் அதற்குமுன் எப்போதும் தூங்கியதில்லை. அதுவுமன்றி, அவரோடு லீலாவதியும் இரவு முழுதும் தூங்காமல் விழித்திருந்தாலும், அவள் அலுத்துப் போகவாவது, அவ்வளவு அதிக நேரம் தூங்கவாவது ஏதுவில்லை. ஆதலால் அவளும் அந்நேரம் வரையில் எழுந்து வராமல் இருந்தது ஒருவித சந்தேகத்தை உண்டாக்கிக்கொண்டே இருந்தது. ஆகவே ஜெமீந்தாரினது அந்தரங்கக் காரியதரிசியான கோவிந்தசாமி படிக்கட்டின் வழியாக ஏறி வெல்வெட்டு மாடத்திற்குச் சென்று பார்த்தான். அதன் வெளிக்கதவு ஒரு பெருத்த பூட்டினால் பூட்டப்பட்டி ருந்ததை அவன் காணவே, அவனது மனம் பெருத்த வியப்பும், கலக்கமும் கொண்டது. அந்த வெல்வெட்டு மாடம் அத்தகைய பெரிய பூட்டினால் ஒருநாளும் பூட்டப்பட்டிருந்ததையே அவன் கண்டவனல்ல ஆதலால், அது புதுமையாகத் தோன்றியது. அதுவுமன்றி அந்தப் பூட்டு ஜெமீந்தாரினுடைய திரவிய மெல்லாம் வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான இரும்புப் பெட்டியில் பூட்டப்பட்டிருந்த பூட்டு என்பதையும் அவன் எளிதில் கண்டுகொண்டான். உடனே அவனது மனதில் எண்ணிறந்த சந்தேகங்களும் நினைவுகளும் எழுந்தன. ஜெமீன்தார் தமது இரும்புப் பெட்டியின் பூட்டை எடுத்து வெளிக் கதவிற்கு உபயோகப்படுத்தக்கூடிய அப்படிப்பட்ட பிரமேயம் என்ன நேர்ந்திருக்கலாம் என்று அவன் யோசித்து யோசித்துப் பார்த்து, முடிவில், அவர் அப்படிப் பூட்டி இருக்க