பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 41 மாட்டார் என்ற முடிவிற்கே வந்தான்; அவ்வாறு அவர்கள் வெளியில் பூட்டிக்கொண்டு உள்ளே இருப்பதும் அசம்பாவித மாகத் தோன்றியது; ஆகவே, அந்தப் பூட்டை அவ்விடத்தில் பூட்டியது வேறே மனிதராகத்தான் இருக்க வேண்டும் என்றும், அப்படிப் பூட்டிய மனிதர் திரவியங்கள் வைக்கப்பட்டிருந்த இரும்புப்பெட்டியைத் திறந்திருக்க வேண்டுமென்றும், அநேகமாய் அவர்கள் திருடராகத்தான் இருக்க வேண்டும் என்றும் அவன் தீர்மானித்துக் கொண்டான். அந்தச் சந்தேகம் தோன்றவே, ஜெமீந்தார் முதலியோரை அவ்வாறு அந்தத் திருடர்கள் கொன்றுபோட்டிருப்பார்களோ என்ற பெருத்த திகிலும் உடனே எழுந்து அவனது மனத்தை வதைக்கத் தொடங்கியது. ஆகவே, அவன் அந்தக் கதவைப் பலமாக இரண்டு மூன்று தரம் தட்டி, ‘அம்மா அம்மா! ஐயா! ஐயா!’ என்று ஐந்தாறு தடவை ஓங்கிக் கூப்பிட்டுப் பார்த்தான். உட்புறத்திலிருந்து அற்பமான ஒசைகூட உண்டாகவில்லை. ஆகையால், அவன் முற்றிலும் பதைபதைத்தவனாய்க் குழம்பித் தவித்த மனதோடு அவ்விடத்தைவிட்டு விரைவாகக் கீழே இறங்கி, அவ்விடத்திலிருந்த மற்ற வேலைக்காரர்களை அழைத்து, தாம் கண்ட புதுமையையும் கொண்ட சந்தேகத்தை யும் அவர்களிடம் வெளியிட்டதன்றி, அவர்களில் சிலரை அழைத்துக்கொண்டு ரகசிய வாயிலால் ரதிகேளி விலாஸ்த்திற் குள் நுழையும் படிக்கட்டை அடைந்து, அதன் வழியாக மேலே சென்றான்.

படிக்கட்டு முடிந்த இடத்தில் மறைவாக வைக்கப்பட்டிருந்த விசை இன்ன இடத்திலிருக்கிறது என்பது அவனுக்கு நன்றாகத் தெரியுமாதலால், கோவிந்தசாமி அந்த விசையை அழுத்த, அவ்விடத்திலிருந்த கண்ணாடிக் கதவு உடனே திறந்து கொண்டது. எல்லோரும் பெருத்த பயத்தோடும் கவலை யோடும் தங்களது பார்வையை உட்புறத்தில் செலுத்தவே, அவ்விடத்தில் ஜெமீந்தார் விசை வைத்த நாற்காலியில்