பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 பூர்ணசந்திரோதயம் - 5

மாட்டிக்கொண்டு சோர்ந்து பிணம் போலக் கிடந்தது அவர்களது திருஷ்டியில் பட்டது. உடனே வேலைக்காரர்கள் எல்லோரும் நடுக்கமும் கலவரமும் அடைந்தவர்களாய் சரேலென்று உள்ளே நுழைந்து ஜெமீந்தாரிருந்த நாற்காலிக் கருகில் போய்ச் சேர்ந்து ஜெமீந்தாரை உற்று நோக்கினர். இரவில் இரும்புப் பொறியில் அகப்பட்டு மாண்டு விறைத்துக்கிடக்கும் எலிபோல ஜெமீந்தார் பேச்சு மூச்சு அசைவு முதலிய எவ்வித உயிர்ச் சின்னங்களு மின்றிப் பிணம்போலக் கிடந்ததைக் காணவே, அவர் இறந்து போய் விட்டார் என்ற எண்ணமே எல்லோரது மனதிலும் பட்டது. அவர்களது இருதயங்களெல்லாம் தடதடவென்று அடித்துக்கொண்டன. தேகங்கள் பதறி ஆடிப் போயின; மனம் பொங்கி எழுந்தது; அவர் இறந்து போயிருந்தால், அதன் முகாந்திரம் என்னவென்று தாம் வெளியில் சொல்லுகிற தென்பதை அறியாதவராய், அவர்கள் பெரிதும் கலங்கித் தத்தளித்தனர். அந்த நாற்காலியில் இன்னவித மான விசை வைத்திருக்கிறதென்பதை கோவிந்தசாமி அறிவான். ஆதலால், அவன் உடனே பாய்ந்து அந்த விசையை அழுத்த, அவரது உடம்பைப் பிடித்துக்கொண்டிருந்த வளையங்களெல்லாம் விலக்கிக் கொண்டன. ஜெமீந்தாரது தேகம் அப்படியே முன் பக்கத்தில் சாய்ந்து விழுந்துவிட்டது. வேலைக்காரர்கள் எல்லோரும் முனைந்து ஒன்றுகூடி அவரைத் தூக்கி எடுத்து பக்கத்திலிருந்த மேஜையின் மீது கிடத்தினர். கோவிந்தசாமி உடனே அவரது மார்பிலும் நாடியிலும் தனது கையை வைத்து ஆராய்ந்து பார்த்தான். நாடி அடித்துக்கொண்டதோ இல்லையோ என்பதை அவன் நிச்சயிக்க இயலாதபடி அது சந்தேகமறத் தோன்றியது. அவரது உடம்பு முழுதும் ஜில் லிட்டுப் போயிருந்தது. ஆனாலும், முகத்தில் பிரேதக்களை அவ்வள வாகத் தோன்றவில்லை. ஆதலால், அவர் இறந்து போயிருக்க மாட்டார் என்ற சந்தேகம் கோவிந்தசாமியினது மனத்தில் தோன்றியது. ஆகையால், அவன் உடனே ஒரு வைத்தியனை அழைத்து வரும்படி ஒர் ஆளை அனுப்பிவிட்டு, தனக்குத்