பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 48 தெரிந்த பல சிகிச்சைகளைச் செய்து, அவரது உடம்பில் உஷ்ணம் உண்டாக்குவதற்கான காரியங்களைச் செய்தான். சிறிது நேரத்தில் அவரது நாடி அற்பமாக அடித்துக் கொள்வதை அவர்கள் உணர்ந்தனர். உடனே அவர்களது மனதில் ஒருவித நம்பிக்கையும் ஆவலும் எழுந்துதுண்ட ஆரம்பித்தன. அவர்கள் மேன்மேலும் பல வகையில் முயற்சித்து அவரது உயிரைத் திருப்ப முயன்று கொண்டிருந்த காலத்தில் வைத்தியர் ஒருவரும் வந்து சேர்ந்தார். அவர் செய்த திறமையான சிகிச்சைகளினால், இரண்டொரு நாழிகை சாவகாசத்தில் ஜெமீந்தார் மறுபடியும் உணர்வு பெற்று விழித்துக் கொண்டார். அவரது தேகம் முற்றிலும் சோர்ந்து மெலிவடைந்து தளர்ந்து கிடந்தது. ஆகையால் எல்லோரும் அவரை எடுத்து வெல்வெட்டு மாடத்திலிருந்த ஒரு கட்டிலில் மெத்தையின்மீது திண்டுகளில் சார்த்தி வைத்தனர். அவர்தமது சுய உணர்வும் பலமும் அடைந்து கண்களைத் திறந்து பேச ஆரம்பித்து, ‘கோவிந்தசாமி! நம்முடைய லீலாவதி இருக்கிறாளா என்றார்.

அதைக்கேட்டவுடனே அங்கிருந்த ஆட்களெல்லோரும் அங்குமிங்கும் சென்று தேடிப்பார்த்துவிட்டு வந்து லீலாவதி காணப்படவில்லை என்று கூறினர்.

உடனே ஜெமீந்தார், “இரண்டு நாளாக நம்முடைய வீட்டில் வந்திருந்த ஷண்முக வடிவென்ற இன்னொரு பெண்பத்திரமாக இருக்கிறாளா?’ என்று நிரம் பவும் கவலையோடு வினவ, கோவிந்தசாமி, “அந்த அம்மாளும் காணப்படவில்லையே?’’ என்று கூறிவிட்டு நிரம்பவும் கவலையோடு மேலும் பேசத் தொடங்கி, ‘ எஜமானே! நேற்று ராத்திரி இவ்விடத்தில் என்ன நடந்தது? இரும்புப்பெட்டி திறந்து கிடக்கிறது.அதற்குள் எவ்விதமான பொருளும் காணப்படவில்லை. அதிலிருந்த பூட்டினால் வெல்வெட்டு மாடத்தின் வெளிக்கதவு பூட்டப் பட்டிருக்கிறது. நீங்களோ இரும்பு நாற்காலியில் மாட்டப்பட்டு ஸ் மரணை தப்பிக் கிடந்தீர்கள். என்ன விபரீதம் நடந்தது?