பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 பூர்ணசந்திரோதயம் - 5

இருக்கிறார் என்றும், தன்னைப்பற்றி அவர் நிரம்பவும் துக்கித்துக் கொண்டிருப்பதாகவும், ஷண்முகவடிவு இரவி லேயே எங்கேயோ போய்விட்டாள் என்றும் லீலாவதி தெரிந்து கொண்டாள். அவள் அன்றைய தினம்காலையிலிருந்துதண்ணீர் கூட அருந்தாமல் முற்றிலும் களைத்துச் சோர்வடைந்திருந்தாள். ஆதலால் அவளது கண்கள் இருண்டன. உடம்பு தள்ளாடியது. கால்கள் தடுமாறின. நாவறண்டு போயிருந்தது. பசி அகோரமாகப் பற்றித் தகித்துக் கொண்டிருந்தது. உடம்பின் வேதனை சிறிதும் சகிக்க இயலாததாக இருந்தது. ஆகவே, அவள் தான்rேமமாகத்திரும்பி வந்து விட்டதாக உடனேதன் பெரிய தந்தைக்குச் செய்தி சொல்லியனுப்பிவிட்டு சமையலறைக்குப் போய் அப்போது கிடைத்த சொற்ப ஆகாரத்தை உண்டபின் அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டுத் தனது பெரிய தந்தை படுத்திருந்த இடத்திற்குப் போய்ச் சேர்ந்தாள்.

லீலாவதி பத்திரமாகத் திரும்பிவந்து சேர்ந்தாள் என்ற செய்தியைக் கேட்டவுடனே, ஜெமீந்தார் அடைந்த சந்தோஷத்திற்கு அளவில்லை.அவர் தமது தேக அவஸ்தை களையும் மறந்தார். பெருத்த திரவியம் போய்விட்டதனால் ஏற்பட்ட மனவேதனையும் விலகியது. பழைய மனோதிடமும் உற்சாகமும் உடனே திரும்பின. சந்தோஷம் முகத்தில் ஜ்வலிக்க ஆரம்பித்தது. கால்நாழிகை சாவகாசத்தில் லீலாவதியே நேரில் வந்து அளவற்ற வாத்சல்யத்தோடும் மரியாதையாகவும் அவரிடம் பேசி, அவரது தேகநிலைமையைப் பற்றி விசாரிக்கத் தொடங்கவே, ஜெமீந்தார் ஆனந்தக் கண்ணிர் விடுத்தவராய் நிரம்ப அன்பாக அவளைத் தடவிக் கொடுத்து, அவள் திருடனுடன் போய்த் திரும்பிவந்த வரலாற்றைச் சொல்லும்படி ஆவலோடு கேட்க, அவள் உடனே தனது விருத்தாந்தங்களை எல்லாம் விரிவாக எடுத்துக் கூறியதன்றி, தான் திருடனது வீட்டிலிருந்து தப்பி வந்தபிறகு நேராக நீலமேகம்பிள்ளையின் மாளிகைக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டரினது ஜாகைக்கும்