பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 51 குள்ளும், திருவாரூர்ப் பாதையிலும் உடனே ஆள்களை அனுப்பும் படி ஏற்பாடு செய்தார். தாம் இரண்டொரு நாளைக்குள் மறுபடி எப்படியும் ஷண்முகவடிவைக் கண்டு அவளைத் தமது ஆசைநாயகியாகச் செய்து கொள்ளலாம் என்ற நினைவையே அவர் சதாகாலமும் தியானம் செய்தவராய் மறுபடியும் தமது சயனத்தை அடைந்தார். அதன்பிறகு லீலாவதி ஒரு வண்டியில் வெண்ணாற்றங்கரைக்கு அனுப்பப்பட்டாள். அவ்விடத்தில் நிகழ்ந்த விஷயங்கள் முன்னரே விரிவாகக் கூறப்பட்டன. ஆதலால், அவைகளை விடுத்து, அவ்விடத்தி லிருந்து இன்ஸ்பெக்டரால் தனது மாளிகைக்கு அனுப்பப்பட்ட லீலாவதியை நாம் பின்தொடர்ந்து செல்வோம். அவள் வெண்ணாற்றங்கரையிலிருந்து தஞ்சைக்கு வந்து தங்களது மாளிகையை அடைய இரவு பதினோருமணி சமயமாயிற்று. வாசலில் இருந்த பாராக்காரன் அவளை உள்ளே அனுப்பி விட்டுக் கதவுகளை மூடிக்கொண்டு படுத்து நித்திரையில் ஆழ்ந்துவிட்டான். ஜெமீந்தார் முதல் நாளிரவிலிருந்து நாற்காலியில் அகப்பட்டுக் கிடந்த மெலிவினாலும், தேக அவஸ்தையினாலும், ஷண்முகவடிவைப் பற்றியும் மற்ற விஷயங்களைப் பற்றியும் கொண்ட மனவேதனைகளினாலும் அலுத்துப்போய்த் தமது ரதிகேளி விலாசத்தில் லொகுசான ஒரு பஞ்சனையின் மீது படுத்து ஆனந்த நித் திரையில் ஆழ்ந்திருந்தார். லீலாவதியையும், ஷண்முகவடிவையும் தேடப்போன சிப்பந்திகள் எல்லோரும் மாளிகைக்குத் திரும்பி வராமல் பல இடங்களில் தங்கிவிட்டனர். ஆதலால், சமையல் காரியையும் கோவிந்தசாமியையும் பாராக்காரனையும் தவிர, அந்த மாளிகையில் வேறே வேலைக்காரர் எவரும் படுத்திருக்க வில்லை. சமையல்காரி மடைப்பள்ளிக்குள் ஒரு மூலையில் படுத்துக் குறட்டைவிட்டுத் தூங்கிக் கொண்டிருந்தாள். கோவிந்தசாமி அன்று பகல் முழுதும் ஜெமிநாரைப் பிழைக்க வைப்பதற்காக எடுத்துக்கொண்ட அபாரமான பிரயாசையினால் நிரம்பவும் அலுத்துப்போய் அவனுக்காக விடப்பட்டிருந்த ஒரு