பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 59 தோன்றி கூடிணத்தில் மறைந்தது. ஆனால், முதலில் சாதாரணமாகத் தோன்றிய அந்த வடிவத்தின் முகம் அடுத்த கூடிணத்தில் அவளைப் பார்த்துப் புன்னகை செய்ததைக் காணவே, அவள் திடுக் கிட்டுச் சடேரென்று பின் பக்கம் திரும்பிப் பார்த்தாள். பார்க்கவே, அவளை அபகரித்துச் சென்ற கள்வனான கட்டாரித்தேவன் உண்மையிலேயே வந்து அவளுக்குப் பின்னால் சிறிதுதுரத்தில் நின்று அவளைப் பார்த்து ஆனந்தமாகப் புன்னகை செய்து கொண்டிருந்ததை லீலாவதி உணர்ந்தாள். உணரவே, அவளது பிராணனில் பெரும்பாகமும் போய் விட்டதென்றே சொல்ல வேண்டும். அவளது வாயிலிருந்து, “ஐயோ! அப்பா திருடன் ‘ என்று கூச்சல் வெளிப்பட்டது. ஆனாலும், அவளது நாக்கு குழறிப் போயிற்று. பெரும் பீதியினாலும் திகிலினாலும் உரோமம் சிலிர்த்தது. குலை நடுக்கமும், மனக் குழப்பமும், வயிற்றில் சங்கடமும் உண்டாயின. தான் எவ்வித ஆடையுமில்லாமல் இருக்கும் அந்த அசந்தர்ப்ப வேளையில் ஒரு புருஷன் வந்து தனக்கருகில் நிற்கிறானே என்ற எண்ணம் அவளது உடம்பைக் கிடுகிடென்று நடுக்குவித்தது. சகிக்க இயலாத பெருத்த கிலேசமும், நாணமும், சஞ்சலமும் அடைந்தவளாய், அவள் தனக்கு நிரம் பவும் அருகிலிருந்த ஒரு பூத்தொட்டியின் அப்புறத்தில் பாய்ந்து தனது உடம்பை மறைத்துக்கொண்டவளாய், தனது குரல் எட்டிய வரையில் ஓங்கிக்கூச்சலிட ஆரம்பித்தாள். அவளது அற்புதமான எழில் வழிந்த மனமோகன வடிவத்தைக் கண்டு அப்படியே பிரமித்து உணர்வு கலங்கி மதிமயங்கி இன்னது செய்வ தென்பதை அறியாமல் இரண்டொரு நிமிஷம் நின்ற கட்டாரித் தேவன் அவள் பலமாகக் கூச்சலிடுவதைக் கேட்டு, மனிதர் யாராகிலும் உதவிக்கு வந்துவிடப் போகிறார்களே என்று அஞ்சி அவளது கூச்சலை அடக்க வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டவனாய்த் தனது இடுப்பிலிருந்த பீச்சாங்கத்தியை உருவிக் கையில் பிடித்துக்கொண்டு, ‘அடி லீலாவதி, இப்படி நீ கூச்சலிட்டால், உன்னை நான் இலேசில் விட்டுவிட்டுப்