பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 65 அதைக்கேட்டலீலாவதி குலைநடுக்கமும் பீதியும் அடைந்த வளாய், ‘ஐயா ஏற்கெனவே பலவகையானதுன்பங்களுக்கும் துயரங்களுக்கும் ஆளாகியிருப்பவளான என் விஷயத்தில் நீரும். இப்படிப்பட்ட கொடுமை செய்ய வேண்டுமா? நேற்று வரையில் என்னிடத்தில் எவ்வளவோ அன்பும் மரியாதையும் பாராட்டிய மனிதராகிய நீர் திடீரென்று மாறுபட்டு என்மேல் இப்படிப்பட்ட எண்ணம் கொள்வது கொஞ்சமும் அடுக்குமா? நான் நேற்று உம்மிடம் சொன்னவார்த்தைகளையே முக்கியமாக எடுத்துக்கொண்டு நீர் என்னை வற்புறுத்துவது சரியல்ல. நான் நேற்று அநாதையாக உம்முடைய வீட்டில் தனியாக வந்து அகப்பட்டுக்கொண்டிருந்தேன். ஆகையால், நீர் என்ன செய்வீரோ என்று பயந்து, நான் ஏதோ வாயில் வந்ததை உளறி வைத்தேன். அவ்வளவே தவிர, உண்மையில் நான் அப்படிப் பேசினவளல்ல. அதுவுமன்றி, நான் பதிவிரதைத் தனம் கொண்டாடுவதாக நீர் சொல்லி, என்னை இழிவு படுத்துகிறீர். நான் அப்படிப் பதிவிரதைத்தனம் கொண்டாடவில்லை. பவானியம்பாள்புரம் ஜெமீந்தாருடைய விஷயத்தில் நான் தவறாக நடந்து கொண்டது உண்மைதான். எங்கள் இருவருக்கும் அப்படிப்பட்ட சம்பந்தம் ஏற்பட வேண்டுமென்று ஏதோ தலைவிதி இருந்ததனால், நாங்கள் ஒருவர் மேல் ஒருவர் பரஸ்பரம் பிரியம்கொண்டு விட்டோம். அதனாலேயே நான் அடியோடு கெட்டுப்போய் விடவேண்டுமென்று சொல்லுவது ஒழுங்காகுமா? நான் ஒருவர் விஷயத்தில் தவறிப் போனதனால், என்னைக் கண்டு என்மேல் ஆசைப் படவும், என்னைப் பலாத்காரம் செய்யவும் சகலமான மனிதருக்கும் அதிகாரம் உண்டாகிவிட்டதென்று சொல்ல முடியுமா? கேவலம் பரத்தைத் தொழிலை அனுஷ்டிக்கும் தாசியைக்கூட அவளுடைய விருப்பத்துக்கு மாறாகக் கட்டாயப்படுத்த யாருக்கும் அதிகாரமில்லையே. அப்படியிருக்க, நான் ஒருவர் விஷயத்தில் என்னுடைய கற்பை இழந்துவிட்டேன் என்ற ஆதாரத்தையே முக்கியமானதாக வைத்துக்கொண்டு நீர் பேசுவது நியாயமல்ல.