பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 67 அவளிடம் தான் மேன்மேலும் பேசிக்கொண்டே போனால், அந்த சம்பாஷணை முடிவுபெறாமல் வளர்ந்துகொண்டே போகுமென்று நினைத்தவனாய், “சரி; உன்னோடு வாக்குவாதம் செய்து கொண்டிருப்பதற்காக நான் இங்கே வரவில்லை. அப்படி வாக்கு வாதம் செய்து பொழுதை வளர்க்கவும் என் மனநிலைமை இடங் கொடுக்கவில்லை. மயிலே மயிலே என்றால் அது இறகு போடாது. பலாத்காரத்துக்கு மிஞ்சின மருந்தே கிடையாது. ஆகையால் நான் அதைத்தான் இனி பிரயோகிக்க வேண்டும் ‘ என்று கூறிய வண்ணம், அவள் மறைந்திருந்த பூத்தொட்டியை நோக்கி ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து, அவளைத் தாவிப் பிடிக்க எத்தனித்தான்.

அவனது மூர்க்கமான வார்த்தையையும், பிடிவாதமான தீர்மானத்தையும் உணர்ந்த லீலாவதி இன்னது செய்வதென்பதை அறியாமல் பதறிப்போய், “ஐயோ! அப்பா!’ என்று ஓங்கிக் கூச்சலிட்டுக்கொண்டு அவ்விடத்தைவிட்டு ஆணிகளின் போர்வைகள் மாட்டப்பட்டிருந்த இடத்திற்கு ஓடி, காஷ்மீர் சால்வையை இழுத்துத் தன் மேல் போட்டு ஒருவாறு மறைத்துக்கொண்டு அவ்விடத்தை விட்டு அப்பால் ஒடத் தலைப்பட்டாள். இடையிடையில் நாற்காலிகளும், சோபாக்களும், மேஜைகளும், பூத் தொட்டிகளும் இருந்த மையால், அவற்றின் மறைவுகளில் போனபடி, கட்டாரித் தேவனது கையில் பிடிபடாமல் அங்குமிங்கும் பாய்ந்து, மான்போலத் துள்ளிக் குதித்துப் பெருங்கூக்குரல் செய்யலானாள். கட்டாரித்தேவன் அவ்விடத்திற்கு வந்தபோது மாளிகையில் அதிக ஆட்கள் இல்லை என்று உணர்ந்துகொண்டு தைரியமடைந்து அன்றையதினம் எப்படியும் அவளைக் கற்பழிக்க வேண்டுமென்று உறுதிசெய்து கொண்டிருந்தவன் ஆதலால், அவள் செய்த பேரிரைச்சலைக்கண்டு சிறிதும் அஞ்சாமல் பாய்ந்து பாய்ந்து அவளைத்துரத்தத் தொடங்கினான். அவ்விடத்தில் மேலே கூறப்பட்ட சாமான்கள் குறுக்கிடாது