பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 7 கேட்டுக் கொண்டாலும், அவர் அதை மறுக்கவே மாட்டார். அவரிடத்திலும், அந்தப் போலீஸ் இன்ஸ்பெக்டரிடத்திலும் உனக்கு எப்படிப்பட்ட முக்கியமான காரியம் ஆக வேண்டு மானாலும், அதை நான் முடித்துத் தருகிறேன். நீ கவலைப்பட வேண்டாம். வா, நாம் அந்தப் பக்கத்திலுள்ள என்னுடைய வெல்வெட்டு மாடத்துக்குப் போவோம். அங்கே போனவுடன் நீ எனக்கு ஆகவேண்டிய சங்கதிகளைச் சொன்னால், அதை நானே நிறைவேற்றிக் கொடுக்கிறேன்” என்று நயமாகக் கூறினார்.

அதைக் கேட்ட கட்டாரித்தேவன், ‘ஐயா! உங்களுடைய மகள் அதோ விழுந்து கிடக்கிறாள். அவளை விட்டுப் பிரிந்துவர என் மனம் இணங்கவில்லை. ஆகையால், அவளிடம் போய்ப் பார்த்து அவளை எழுந்திருக்கச் செய்தபின் நாம் தனிமையாய்ப் பேசலாம்’ என்றான்.

ஜெமீந்தார், ‘அப்பா! அவள் உன்னைக் கண்டு பயந்து கொண்டு படுத்திருக்கிறாள். அதுவுமன்றி, அவளுடைய உடம்பிலும் ஆடையில்லாமல், அலங்கோலமாக இருக்கிறது. இந்த நிலைமையில் நாம் அவளுக்குச் சமீபத்தில் போவது ஒழுங்கல்ல. தவிர நீ அவளிடம் மறுபடி போனால் அவளுடைய பயம் அதிகரிக்கும். ஆகையால் நாம் அடுத்த அறைக்குப் போவோம். அவ்விடத்திலிருந்து யாரையாவது வேலைக் காரியை வரவழைத்து இங்கே அனுப்பலாம்’ என்று நயமாக வற்புறுத்திக் கூறினார்.

அதைக் கேட்ட கட்டாரித்தேவன் அதற்குமேல் ஒன்றும் சொல்லமாட்டாதவனாய், அவரது விருப்பத்திற்கு இணங்கி னான். இருவரும் அவ்விடத்தை விட்டு வெல் வெட்டு மாடத்திற்குப் போய்ச் சேர்ந்தனர். -

அவ்வாறு அவர்கள் சென்ற காலத்திற்குள் ஜெமீந்தார் தமக்குள் சிந்தனை செய்து, இந்த ராrசன் எப்போது ஒரு