பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 73 நான் என்ன செய்கிறது? ஆகையால் என்னை இங்கே விட்டு விட்டு நீர் மாத்திரம் கீழே போக நான் இணங்கமாட்டேன்’ என்றான். -

ஜெமீந்தார், “நிரம்பவும் அபாயகரமான இந்தச்சமயத்தில் நீ இப்படி இடைஞ்சல் செய்வது நியாயமல்ல. என் மகள் திடீரென்று கீழே விழுந்து கிடக்கிறாள். அவளுக்கு உயிர் இருக்கிறதோ போய் விட்டதோ என்பதுகூட சந்தேகமாக இருக்கிறது. இந்த அவசர வேளையில், நான் உடனே யாரையாவது உதவிக்கு அழைக்க வேண்டுமென்பது உமக்குத் தெரியாத விஷயமல்ல. வேலைக்காரர்களை அழைக்கும் மணியை அசைப்பதற்கு அதோ என் மேஜையண்டை ஒரு விசை இருக்கிறது. அதை நான் அழுத்தினால், கீழே வேலைக்காரர்கள் படுத்திருக்கும் அறையிலுள்ள மணி கிணுகினென்று அடித்துக்கொள்ளும்! ஆனால் இப்போது நடு ராத்திரி வேளை. ஆகையால் அவர்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருப்பார்கள். இந்த மணியோசையைக் கேட்டு அவர்கள் விழித்துக் கொள்வார்களோ என்னவோ தெரியவில்லை. அதை உத்தேசித்துத்தான் நான் நேரிலேயே கீழே போகலாமென்று நினைத்ததே தவிர, நீ எண்ணுகிறபடி போலீஸாரை வரவழைப்பதற்கு அல்ல. இருந்தாலும் பாதகமில்லை. நீ சந்தேகப்படுகிறபடியால், நான் கீழே போகவில்லை. இங்கிருந்தபடி இந்த விசையை அழுத்துகிறேன்” என்று கூறிய வண்ணம் மேஜையண்டை போனார்.

கட்டாரித்தேவன், ‘ஆம், அதுதான் நல்ல யோசனை. ஆனால், நீர் இந்த நடுராத்திரியில் மணியை அசைக்கிறதி லிருந்து, இங்கே ஏதோ விபரீதம் நேர்ந்திருப்பதாக எண்ணிக் கொண்டு, வேலைக்காரர் பலர் ஒன்றுகூடி இங்கே வந்தாலும் வரலாம். என்னைப் பார்க்கும் போதே அவர்களுக்குச் சந்தேகம் உண்டாகிவிடும். நான் இந்த அகால வேளையில் இங்கே இருப்பதிலிருந்து என்னால் உங்களுக்கு ஏதாவது அபாயம்