பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 பூர்ணசந்திரோதயம் - 5 நேர்ந்திருப்பதாக எண்ணிக்கொண்டு என்னைப் பிடித்துக் கொள்ளவும், என்னை உபத்திரவிக்கவும் முயலுவார்கள். ஆனால், அவர்கள் எத்தனைபேர் வந்தாலும், நான் அவர்களை எல்லாம் ஒரு நொடியில் தவிடுபொடி ஆக்கிவிடுவேன். அதற்காக நான் பயப்படவில்லை; இப்போது நிரம் பவும் அவசரமாக வேலைக்காரிகள் லீலாவதியைக் கவனித்து அவளுக்கு ஆகவேண்டிய காரியங்களைச் செய்ய வேண்டிய இந்த அவசர வேளையில் அவர்கள் இவ்விடத்தில் வீண் கலகம் விளைத்துக்கொண்டிருக்கப் போகிறார்களே என்று நினைக்கிறேன். வேறொன்றுமில்லை’ என்றான்.

ஜெமீந்தார் சிறிது நேரம் சிந்தனை செய்தபின், ‘சரி, நீ சொல்வதும் சரியான சங்கதிதான். நீ ஒரு காரியம் செய், அதோ பக்கத்தில் தெரிகிறதே கட்டில், அவ்விடத்தில் போய் நீ மறைந்து கொண்டிரு; நான் விசையை அழுத்தி மணியை அடித்து வேலைக்காரியை அழைத்து, என் மகளிடம் அனுப்பிய பிறகு, நீ அவ்விடத்தை விட்டு இங்கே வரலாம்’ என்றார்.

அதைக் கேட்ட கட்டாரித்தேவன் அந்த ஏற்பாட்டை ஒப்புக் கொண்டு அவ்விடத்தை விட்டுப்போய், அவரால் காட்டப்பட்ட கட்டிலிற்கு அப்பால் மறைந்து கொண்டான்.

ஜெமீந்தார்.தனது எண்ணம் எப்படியும் பலிதமடையும் என்று நினைத்து அப்போதே ஆனந்தமும் குதூகலமும் அடைந்த வராய்த் தமது மேஜையண்டை போய், அவ்விடத்திலிருந்த விசையை அழுத்துவதுபோலப் பாசாங்கு செய்து அதன் சொருகு பெட்டியை வெளியில் இழுத்து அதற்குள் இருந்த பிஸ்டல் என்ற பெயருடைய இரண்டு கைத் துப்பாக்கிகளை எடுத்து அதற்குள் தோட்டாக்கள் போடப்பட்டிருக்கின்றனவா என்று பார்த்துத் திருப்தி செய்து கொண்டவராய் வெளியில் தெரியாத படி, அவைகளைத் தமது மடியில் சொருகிக் கொண்டு, கால் நாழிகை சாவகாசம் அவ்விடத்திலேயே உட்கார்ந்திருந்தார்.