பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 75 அவர் விசையை அழுத்திவிட்டு வேலைக்காரியின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று கட்டாரித் தேவன் எண்ணிக்கொண்டு மறைவில் இருந்தான். கால் நாழிகை நேரம் கழிந்தவுடனே, அவர் அவ்விடத்தை விட்டெழுந்து திருடன் ஒளிந்திருந்த கட்டிலை நோக்கி நடந்து, ‘மணியை அசைத்தும், வேலைக்காரர்கள் யாரும் வரவில்லை. எல்லோரும் பலமாகத் தூங்குகிறார்கள் போலிருக்கிறது’ என்று கூறிக் கொண்டே திருடன் மறைந்திருந்த இடத்திற்குப் போய் ச் சேர்ந்தார். கட்டாரித்தேவன் அவ்விடத்தில் கிடந்த வெல் வெட்டு ஸோபா ஒன்றின்மேல் உட்கார்ந்து கொண்டிருந்தான். அவனுக்கு எதிரில் போய்ச் சேர்ந்த மருங்காபுரி ஜெமீந்தார் அவனை நோக்கி, ‘என்ன அப்பா நாம் இவ்விடத்தில் காத்திருப்பதில் உபயோகமில்லை. வேலைக்காரர்கள் யாரும் வரவில்லை. என் மகள் இப்போது எப்படி இருக்கிறாளோ தெரியவில்லை. உன்னைநான் வெளியில் அனுப்பிவிட்டு பிறகு வேலைக்காரியிடம் நேரில் போய் தட்டி எழுப்பி அழைத்து வர வேண்டும். நான் அவசரமாகப் போக வேண்டும். உன்னுடைய சங்கதியை நீ சொல், உனக்கு என்னால் என்ன காரியம் ஆகவேண்டும்? சீக்கிரமாகச் சொல், பார்க்கலாம்” என்று கூறிய வண்ணம் அவனுக்கு முன்னால் இரண்டு கஜ தூரத்தில் நின்றார். தாம் கைத்துப்பாக்கியை எடுத்து உபயோகித்தால் அந்தக் குறி தவறாமல் அவன்மேல் படக்கூடியதும், அவன் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து, அதை தட்டிவிடாமல் இருக்கக் கூடியதுமான சரியான இடத்தில் அவர் நின்று கொண்டு அவ்வாறு அவனிடம் பேச்சுக் கொடுத்தார்.

அவன் அவரை ஒரு திரணமாக மதித்து அலட்சியமாகப் பேசத் தொடங்கி, ‘ஏன், நான் எல்லாச் சங்கதியையும் மறுபடி உம்மிடம் சொல்லவேண்டுமா? உம்முடைய பெண் எல்லாச் சங்கதியையும் இதுவரையிலும் உம்மிடம் சொல்லாமலா

இருப்பாள்” என்றான்.