பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. - பூர்ணசந்திரோதயம் - 5 கொண்டிருக்கமாட்டேன். ஒரு பெண் பிள்ளை செய்யத்தகாத காரியத்தையும், பெளரஷமுள்ள ஒரு புருஷன் தன் பெண் ஜாதியை ஏவத்தகாத காரியத்தையும், நான் செய்ய வேண்டுமென்று அவர் வற்புறுத்தினார். ஆகையால் அப்படிப்பட்டவர் எனக்குப் புருஷராக இருக்கத் தகுந்தவரல்ல என்றும் அவரிடம் நான் இருந்து வாழ்வது உசிதமானது அல்லவென்றும் நினைத்து நான் அந்தக் கடிதத்தை எழுதி ரகசியமாக அனுப்பி, போலீசார் அவரைப் பிடித்துக்கொண்டு போகும்படிச் செய்தேன்’ என்றாள்.

நீலமேகம்பிள்ளை இரக்கமாகவும் உருக்கமாகவும் பேசத் தொடங்கி, ‘அம்மா! நீங்கள் சொல்வதெல்லாம் உண்மையாக இருக்கலாம். ஆனால், உங்கள் கட்சி நியாயமானதா, உங்கள் புருஷருடைய கட்சி நியாயமானதா என்பதைப்பற்றித் தீர்மானம் செய்யும் யோக்கியதையை நான் வகித்துக்கொள்வது சரியல்ல. அதுவுமன்றி, அந்த விஷயத்துக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை ஆகையால், அதைப்பற்றிப் பேசுவதை இவ்வளவோடு விட்டு என்தகப்பனார் விஷயத்தில் நாம் இனிச் செய்யவேண்டிய காரியத்தைப் பற்றிப் பேசுவதே நல்லது” என்றார்.

லீலாவதி, “இனி நாம் உங்கள்தகப்பனாருடைய விஷயத்தை மறைத்துவைக்க வேண்டிய அவசியமே இல்லை. நடந்த காரியங்களை எல்லாம் நடந்தபடியே நாம் வெளியிட்டு அவருக்கு ஆகவேண்டிய உத்தரகிரியைகளையும் ஒழுங்காக நடத்துவதே நலமென்று நினைக்கிறேன். அப்படிச் செய்வதனால், என்னுடைய பெயர் கெட்டுப் போகும். இருந்தாலும், அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. இதனால் எனக்கு எப்படிப்பட்ட இழிவாவது அவமானமாவது ஏற்பட்டாலும் அதை நான் ஏற்றுக்கொள்வதே நியாயம்’ என்றாள். உடனே நீலமேகம்பிள்ளை, ‘அம்மா! நீங்கள் வயசில் என்னைவிடச் சிறியவராக இருந்தாலும், எப்போது