பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8O பூர்ணசந்திரோதயம் - 5 பார்த்து வலதுகையிலிருந்த துப்பாக்கியின் விசையை அழுத்திச் சுட்டு விட்டார். கட்டாரித்தேவன் அதை வெகு சீக்கிரத்தில் உணர்ந்து சடேரென்று உட்கார்ந்து கொண்டான். ஆதலால், அந்தத் துப்பாக்கியிலிருந்து வெளிப்பட்ட தோட்டா அவனது தலையின் உச்சியை வருடிக்கொண்டுபோய் பக்கத்திலிருந்த சுவரில் பட்டது. ஜெமீந்தார் இன்னொரு துப்பாக்கியை உபயோகிப்பதற்குமுன், கட்டாரித்தேவன் மின்னல் தோன்றி மறையும் நேரத்தில் புலிபோல ஒரே பாய்ச்சலாகக் கிழவர் மீது பாய்ந்து அவரது இடதுகையிலிருந்த பிஸ்டலைப் பிடுங்கித் தனது கையில் வைத்துக்கொண்டு அவரது காலை எற்றிவிட, அவர் வேரற்ற மரம்போலப் படேரென்று தரையில் விழுந்தார். உடனே கட்டாரித்தேவன் அவர் கூச்சலிடாமலிருக்கும்படி கையை வைத்து அவரது வாயைப்பிடித்து கெட்டியாக அழுத்திக் கொண்டு, அவரிடமிருந்த இன்னொரு பிஸ்டலையும் பிடுங்கிக் கொண்டான். அவர் சுட்டது, அவனது தலையில் உராய்ந்து கொண்டு போனதனால், காயம் ஏற்பட்டு அதிலிருந்து ரத்தம் பொங்கி அவனது முகத்தில் வழிந்தது. அதனால் உண்டான எரிச்சலும் வேதனையும் அவனது கோபத்தையும் மூர்க்கத்தை யும் பன்மடங்கு அதிகரிக்கச் செய்தன. அவன் கோபங்கொண்ட சிங்கம்போல மாறி அவரை நோக்கி, ‘கிழட்டுப் பினமே! மணியை அடிக்கிறதாகச் சொல்லிவிட்டு, துப்பாக்கிகளையா எடுத்துக்கொண்டு வந்தாய் ! ஒகோ என்னைச் சுட்டு கொன்றுவிடவா நினைத்து இங்கே வந்தாய், நல்ல காரியம் செய்தாய்; என்னை யாரென்று நினைத்துக் கொண்டாய்! எப்பேர்ப்பட்ட திடசாலிகளெல்லாம் என்னை எதிர்த்து நிற்க மாட்டாமல் பயந்து ஒடுவார்களே! அப்படியிருக்க, ஒரு சுண்டு சுண்டினால் ஒன்பதுகாத தூரத்தில் போய் விழக்கூடிய பதரிலும் கேவலம் பதரான நீயாஎன்னைக் கொல்ல எத்தனிப்பது? இதோ ஒரு நொடியில் நான் உன்னைக்கொன்று போட்டுவிடுகிறேன். உன்னால் என்ன ஆகுமென்று பார்த்துக் கொண்டாய்? இருக்கட்டும். உனக்கு நான் சரியான வழி சொல்லுகிறேன்.