பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார் 83 உன் விஷயத்தில் இனி நான் யாதொரு தீங்கும் நினைப்பதில்லை என்று நான்பிரமாணிக்கம் செய்து கொடுக்கிறேன்; அதுவுமன்றி, நீ கேட்டுக் கொண்டபடி இளவரசருடைய மன்னிப்பையும் பெற்றுத் தருகிறேன். அதோடு உனக்கு இன்னமும் பணத்தின் மேல் ஆசையிருந்தால் கூட, அதையும் வெளிப்படுத்து. பதினாயிரமல்ல, லக்ஷமல்ல நீ எவ்வளவு பெரிய தொகை கேட்பதனாலும், அதை நான் கூடிய சீக்கிரம் சேகரம் செய்து கொடுக்கத் தடையில்லை” என்றார்.

அதைக் கேட்ட கட்டாரித்தேவன் நிரம்பவும் பயங்கரமாகக் கோப நகை நகைத்து, ‘ஆஹா கிழவா! நீ மகா கெட்டிக்காரன்! செத்தால் பிழைக்கமாட்டாய். கொஞ்ச நேரத்துக்குமுன் இதுமாதிரியே ஆசை வார்த்தை சொல்லி, என்னை அழைத்துக்கொண்டு போய்த் துப்பாக்கியால் சுட்டு என்னைக் கொல்ல நினைத்த மோசக்கார நாயாகிய உன்னை, இனிநான் மறுபடியும் நம்புவேனென்று எண்ணிக்கொண்டாயா? அது ஒருநாளும் பலியாது தாத்தா நீ இவ்விடத்திலேயே இருந்து உன்னுடைய உயிரை விட வேண்டியவனே. உன்னை நான் இனி உயிரோடிருக்கவிட்டால், நீ எப்படியும் என் தலைக்குப் பாக்கு பிடித்துவிடுவாய் என்பதை நான் நிச்சயமாக அறிவேன். ஆகையால் இனி நான் உன்னிடமிருந்து எவ்விதத் தயவையும் நாடவில்லை. நீ உன்னுடைய உயிரை விடுவதற்கு ஆயத்தம் ஆக வேண்டியதைத் தவிர நீ செய்யக்கூடியது வேறே எதுவுமில்லை’ என்று உறுதியாகக் கூறினான்.

அதைக்கேட்ட ஜெமீந்தார்மறுபடியும் மனத்தளர்வும் பெரும் பீதியும் அடைந்தவராய் முன்னிலும் பன்மடங்கு அதிக நைவாகவும் பரிதாபகரமாகவும் கெஞ்சத் தொடங்கி, ‘அப்பா! கட்டாரீ கொஞ்ச நேரத்துக்குமுன் நான் ஆசை வார்த்தை சொல்லிமோசம் செய்துவிட்டேனென்று நினைப்பது சரியல்ல. நான் முதலில் சொன்ன வார்த்தை மனப்பூர்வமாகச் சொல்லப் பட்ட வார்த்தையே. ஆனால் நீகடைசியில் என்மகளைப் பற்றித்