பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 பூர்ணசந்திரோதயம் - 5 தகாத பிரஸ்தாபம் செய்வதைக் கேட்டவுடனே, என்னை மீறிக் கோபம் பிறந்தது. உடனேநான்துப்பாக்கியால் சுட்டுவிட்டேன். நான் உன்னைச்சுட்டுவிடவேண்டுமென்ற கருத்தோடு வந்திருந் தால், கட்டிலண்டை வந்தவுடனேயே நான் சுட்டுவிடலாம் அல்லவா. நான் கடைசிவரையில் பொறுத்திருந்து நீ அந்த ஆட்சேபகரமான வார்த்தையைச் சொன்னபிறகு தானே

சுட்டேன்’ என்றார்.

கட்டாரித்தேவன், ‘அப்படியானால் நீதுப்பாக்கியை எடுத்து வரவேண்டிய அவசியமே இல்லையே” என்றான்.

ஜெமீந்தார்,'இல்லை இல்லை. நீ எனக்கு ஏதாவது கெடுதல் செய்வாயோ என்ற பயம் என் மனசில் இருந்துவந்தது. ஆகையால், தற்காப்பின் பொருட்டு நான் துப்பாக்கிகளை எடுத்து வந்தேனே அன்றி, உன்னைச் சுடவேண்டுமென்று எடுத்துவரவில்லை. நான் சொல்வது பிரமாணமான வார்த்தை. நீ அதை உண்மையென்று நம்பலாம். அதுவுமன்றி, இனி நான் என்.ஆயிசுகால பரியந்தம் உன்ஜோலிக்கே வருவதில்லை என்று பிரமாணிக்கம் செய்து கொடுக்கிறேன். ஆகையால் நீ என்னைக் கொல்லாமல் விட்டுவிடு. அதுவுமன்றி, நான் சொன்ன வாக்குறுதிகளையும் தவறாமல் நிறைவேற்றி வைக்கிறேன்’ என்றார்.

கட்டாரித்தேவன், “உன்னுடைய பிரமாணிக்கத்தைக் கொண்டு போய்க்குப்பையில் போடு. அது யாருக்கு வேண்டும். எனக்கு உன்னுடைய பொருளும் இனி தேவையில்லை. இளவரசருடைய மன்னிப்பும் தேவையில்லை. என்னிடம் இப்போதிருக்கும் பொருளே எனக்கு ஏழேழு தலை முறைக்கும் போதுமானது. நான் அதை எடுத்துக்கொண்டு இந்த ராஜ்ஜியத்தை விட்டு மைசூர் முதலிய வேறு தேசங்களுக்குப் போய்விடுகிறேன். எனக்கு இப்போது முக்கியமாக லீலாவதியே தேவை. அவளை நான் விடப் போகிறதே இல்லை. உன்னை உயிரோடுவிட்டால், நீ அவளை