பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 37 படைகளைவிட்டு நம்மைப் பின்தொடரச் செய்தாலும் செய்வார். இந்த இரவு கழிவதற்குள் நாம் எப்படியாவது விசையாக போய் இந்த ராஜ்ஜியத்தின் எல்லையைக் கடந்து வேறு ராஜ்ஜியம் போய்விடவேண்டும். அதன்பிறகு நம்மை இந்த ராஜ்ஜியத்துப் போலீஸார் பிடித்துக் கைது செய்ய அதிகாரமில்லை’ என்று கூறிதுரிதப்படுத்தினார்.

கலியாணசுந்தரம் அவரது சொல்லிற்கிணங்கி அவரோடு விரைவாக நடக்கலானான். அவர்கள் எல்லோரும் அவ்விடத்தை விட்டு சுமார் நூறுகஜ தூரம் அப்பால் சென்றனர். அவ்விடத்தில் ஒரு பெரிய பெட்டி வண்டி நின்று கொண்டிருந்தது. உன்னதத் தோற்றமும் உறுதியான தேகமும் வாய்ந்த இரண்டு குதிரைகள் அவ்விடத்தில் நின்றுகொண்டிருந்தன. சிறிது நேரத்திற்குமுன் தான் போலீசாரோடு வண்டியில் வந்துகொண்டிருந்த காலத்தில் யாரோ இரண்டு மனிதர்கள் ஒருவர்பின் ஒருவராக ஏறிதலைகால் தெரியாது அதிவேகமாய்ச்சவாரி செய்துகொண்டு வந்த இரண்டு குதிரைகளே அவ்விடத்தில் நின்றவை என்பதைக் கலியான சுந்தரம் எளிதில் கண்டுகொண்டான். அந்த முரட்டு மனிதர்களில் முக்கியஸ்தனாக இருந்த தடித்த மனிதனும் இன்னொருவனுமே அந்தக் குதிரைகளின் மேல் ஏறிக்கொண்டு வந்தவர்கள் என்பதையும் அவன் ஒருவாறு தெரிந்துகொண்டான். அந்தக் குதிரைகளிரண்டும் அங்கிருந்த பெட்டி வண்டியில் உடனே பூட்டப்பட்டன. கலியாணசுந்தரமும், அவர்களினது தலைவ னும் வண்டிக்குள் உட்கார்ந்து கொண்டனர். மற்ற நாலைந்து ஆட்களும் வண்டியின் பின்னும் முன்னுமாக உட்கார்ந்து கொண்டனர். வண்டி உடனே புறப்பட்டது. காசாரி சிறிதும் தாட்சணியம் பாராமல் சவுக்கினால் குதிரைகளை அடிக்கவே, அதுவரையில் அடியென்பதை பெற்றறியாத அந்த உன்னத ஜாதிக் குதிரைகள் சகிக்க இயலாத ஆக்குரோஷமும் துடிப்பும் கொண்டு மாயமாய்ப் பறக்கத் தொடங்கின. குதிரைகள் ஓடிய ஒட்டத்தில் பாதையிலிருந்த தூசியெல்லாம் பிரமாதமாகக்