பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 பூர்ணசந்திரோதயம் - 5 ஆவல் படுகிறது. அந்த ஆவலை நீர் முதலில் தீர்க்க வேண்டு கிறேன். நான் உம்மை இதற்கு முன் எங்கே பார்த்தேன் என்பதே எனக்கு ஞாபகமில்லை. அப் படியிருக்க, என் விஷயத்தில் இவ்வளவு அதிகமாகப் பிரயாசைப்பட்டு, இந்தத் தூரதேசத்துக்கு வந்து, நிரம்பவும் துணிகரமான இந்தக் காரியத்தைச் செய்து என்னை மீட்டுக்கொண்டு போகிறதைக் காண எனக்கு இப்படிப்பட்ட அரிய உதவி செய்தவராகிய நீர் யாரென்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டுமென்று என் மனம் அவாக் கொள்ளுகிறது” என்றான்.

அந்த மனிதன், ‘ஐயா நான் இருப்பது தஞ்சாவூர், என்னைப் பஞ்சண்ணா ராவென்று சொல்லுவார்கள். நீர் எப்போதாவது தஞ்சாவூருக்கு வந்திருந்தால், என்னைப்பற்றி அவசியம் கேள்வியுற்றிருக்கலாம்’ என்றான்.

கலியாணசுந்தரம்:- (மிகுந்த வியப்படைந்து) ஒகோ நீர் தான் பஞ்சண்ணாராவா? நான் உம்மைப்பற்றி இதற்குமுன் பல தடவைகளில் கேள்வியுற்றிருக்கிறேன். ஆனால், நான் உம்மை நேரில் பார்த்ததில்லை. நல்லது, சந்தோஷம்; என் மனசிலிருந்த முக்கியமான ஒரு சந்தேகம் விலகியது.

பஞ்சண்ணாராவ்:- அது என்ன சந்தேகம்?

கலியாண:- வேறொன்றுமில்லை. இந்தக் கோலாப்பூருக்கு நான் வந்தபோது என்னோடு சில பெண்கள் தஞ்சாவூரி லிருந்து வந்தார்கள். அவர்கள் பூனா தேசத்துக்குப் போகிறவர்கள். அவர்கள் என் விஷயத்தில் கெட்ட எண்ணம் கொண்டு இந்த ஊர்ப் போலீஸ் கமிஷனருடைய தயவை எப்படியோசம்பாதித்துக்கொண்டு அவர் என்னை இந்த ஊர்ச் சிறைச்சாலையில் அக்கிரமமாக அடைக்கும்படி செய்ததன்றி, சிறைச்சாலைக்குள் வந்தும் பற்பல தந்திரங்கள் செய்தார்கள். நான் அவர்களுடைய துர் நினைவுக்கு இணங்கவே இல்லை ஆகையால், அவர்கள் வேறு ஏதேனும் சூழ்ச்சி செய்து