பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 பூர்ணசந்திரோதயம் -5 உம்மிடத்திலாவது, வேறே மனிதரிடத்திலாவது பிரஸ்தாபம் செய்ததுண்டா? அந்தப்பெண் இப்போது எங்கே இருக்கிறாள்

என்ற சங்கதியாவது உமக்குத் தெரியுமா?

பஞ்சண்ணா:- அந்த விவரம் எதுவும் எனக்குத் தெரியவே தெரியாது.

கலியாண:- சரி; அதுபோகட்டும். என்னை விடுவிக்கும்படி உம்மை அனுப்பிய மனிதர் எனக்கு ஏதாவது சங்கதி சொல்லச் சொன்னாரா?

பஞ்சண்ணா:- எந்தச் சங்கதியும் சொல்லவில்லை. ஆனால், அவர் ஒரு கடிதம் எழுதி அதை நன்றாக ஒட்டி என்னிடம் கொடுத்திருக்கிறார். அதை நான் முடிவில் உம்மிடம் கொடுக்கும்படி அவர் என்னிடம் கொடுத்திருக்கிறார். அதில் எழுதப்பட்டுள்ள சங்கதி இன்னதென்பதும் எனக்குத் தெரியாது.

கலியாண:- (ஆவலும் வியப்பும் அடைந்து) ஒகோ அப்படியா:அந்தக் கடிதம் இப்போது உம்மிடத்திலிருக்கிறது அல்லவா? அதையாவது நீர் உடனே என்னிடம் கொடுத்தால், நான் படித்துப் பார்த்து என் சந்தேகங்களை உடனே நிவர்த்தி செய்து கொள்ளுகிறேன்.

பஞ் சண்ணா:- அந்தக் கடிதம் இப்போது என் கையில் இல்லை. அதை நான் ஓரிடத்தில் பத்திரமாக வைத்திருக்கிறேன். நாம் தஞ்சாவூருக்குப் போனவுடனே அதை நான் எடுத்து உம்மிடம் கொடுத்து விடுகிறேன். இப்போது அதை நான் கொடுப்பதற்கில்லை.

கலியாண:- (நிரம்பவும் கலக்கமும் கவலையும் அடைந்து நயமாகப் பேசத் தொடங்கி) ஐயா! நீர் எந்த வழியிலும் எனக்குப் பிடி கொடுக்காமல் பேசினால், நான் என்ன செய்கிறது. உம்மை இந்த வேலைக்கு அனுப்பிய மனிதருடைய பெயர் முதலிய விவரங்களைத்தான்நீர்வெளியிடக் கூடாதென்று பிரமாணிக்கம் செய்திருக்கிறீர். என்னிடம் கொடுக்கும்படியாக அவர் கொடுத்த